டி20 உலககோப்பை அணியில் ஷமிக்கு பதிலா இவரை தான் சேர்த்திருக்கனும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் துவங்க உள்ள உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் அஷ்வின் மீண்டும் எடுக்கப்பட்டதும், அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேவேளையில் இந்திய அணியில் சில வீரர்களுக்கு இடம் கிடைக்காதது பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

IND

- Advertisement -

அந்தவகையில் முக்கிய இரண்டு வீரர்களின் தேர்வு குறித்து தனது கருத்தினை பகிர்ந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்திய அணியின் 15 பேர் கொண்ட பட்டியலில் நிச்சயம் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இணைந்திருக்க வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஏனெனில் தீபக் சாகர் இதுவரை 14 டி20 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரை அணியில் எடுக்காது மிகவும் வருத்தமான ஒன்று என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது போலவே இந்த டீ20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர். மற்றபடி ஹார்டிக் பாண்டியா மட்டுமே வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார்.

என்னை பொருத்தவரை முகமது ஷமிக்கு பதிலாக தீபக் சாகரை தேர்வு செய்திருக்கலாம். ஏனெனில் தீபக் சாஹர் டி20 போட்டிகளின் போது பவர் பிளே ஓவர்களிலேயே விக்கெட் வீழ்த்தும் திறமை உடையவர். அதனால் நான் நிச்சயம் ஷமிக்கு பதிலாக தீபக் சாகரை தான் சேர்த்து இருக்க வேண்டும் என்று கூறுவேன் என அவரது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதுபோலவே நிச்சயம் தீபக் சாஹரை அணியில் இணைத்து இருக்க வேண்டும். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக தீபக் சாகர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement