
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணியானது அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தற்போது தயாராகி வருகிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இருக்கும் 8 அணிகளில் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்ப்பு அதிகம் நிலை வரும் வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றனர்.
ஆனால் இந்திய அணி மட்டும் முன்னணி வீரர்களின் காயம் காரணமாக தங்களது சாம்பியன்ஸ் டிராபி தொடரை தொடருக்கான அணியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இவ்வேளையில் காயம் காரணமாக இந்திய அணியின் பந்துவீச்சு எவ்வாறு அமையப்போகிறது? என்கிற கவலையும் அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஏற்கனவே ஷமி காயத்தில் இருந்து விடுபட்டாலும் இன்னும் இந்திய அணிக்காக அவர் விளையாடாமல் இருக்கிறார். அதேபோன்று மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஆஸ்திரேலிய தொடரின் போது காயத்தை சந்தித்தார்.
இதன் காரணமாக எந்த வீரர்கள் பவுலிங் யூனிட்டில் இடம் பெறுவார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : முகமது ஷமி விடயத்தை மறந்து விடலாம். அவர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பவில்லை.
அதேவேளையில் பும்ராவும் ஆஸ்திரேலியா தொடரின் போது காயம் சந்தித்ததால் அவரும் விளையாடுவது சந்தேகம்தான். எனவே என்னை பொறுத்தவரை எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் இடம் பெறுவார். அவருடன் விளையாடப்போகும் மற்ற இரண்டு வீரர்கள் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. நிச்சயம் இந்த தொடரில் பும்ரா இடம்பெறவில்லை என்றால் சிராஜ் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்.
இதையும் படிங்க : இதுமட்டும் நடந்தா அதிசயம் தான்.. பும்ராவின் உடற்தகுதி குறித்து வெளியான தகவல் – விவரம் இதோ
அதேபோன்று ஷமியின் உடற்தகுதி அடிப்படையில் தான் அவரது தேர்வு அமையும் என்பதால் அவரையும் நாம் நிலையாக நம்ப முடியாது. எனவே அர்ஷ்தீப் சிங், சிராஜ் ஆகியோர்தான் புதுப்பந்தில் பந்துவீச வேண்டும். அதேவேளையில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான தேர்வும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கப் போவதாக ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.