கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த எட்டாம் தேதி தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திய இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களையும், வீரர்கள் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
அதில் இந்திய அணியின் சீனியர் வீரரான ரஹானே புறக்கணிக்கப்பட்டது குறித்து அவர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த மிடில் ஆடர் பேட்ஸ்மேன்களில் ரஹானேவும் ஒருவர் என்றால் அது மிகை அல்ல. போட்டியில் தன்மையையும், சூழ்நிலையை புரிந்துகொண்டு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரஹானே சிறப்பாகவே செயல்பட்டு வந்தார்.

மேலும் பேட்டிங் நுணுக்கங்கள் மற்றும் நுட்பமான அறிவு ஆகியவற்றை அறிந்து வைத்திருந்த ரஹானே உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளை விட வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ரோகித் சர்மா, கோலி போன்ற முக்கிய வீரர்கள் வெளிநாட்டு முக்கிய போட்டிகளில் சொதப்பும் பட்சத்திலும் ரகானே சிறப்பான பங்களிப்பை அளித்து கொண்டு வருகிறார்.
ரகானே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு ஒருநாள் அணியில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேசிய சோப்ரா கூறுகையில் : ரஹானே இந்திய அணியில் இருந்து திடீரென ஓரங்கட்ட ஒரு வேதனையான விஷயம் என்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அவனே தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார். நல்ல ஸ்ட்ரைக் வைத்து இருந்தும் அவரை இந்திய அணியில் இருந்து நீக்கியது சரியான முடிவு கிடையாது.

அவரை அணியில் இருந்து நீக்கியதற்கு எந்த காரணமும் இருப்பதாக நான் கருதவில்லை ஆனால் அவரை நீக்கியது என்னைப் பொறுத்தமட்டில் தவறான முடிவு அவருக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிட்டும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



