- Advertisement -
ஐ.பி.எல்

டெல்லி அணியில் கே.எல் ராகுல் ஆட வேண்டிய இடம் இதுதான்.. அதுதான் அந்த அணிக்கு நல்லது – ஆகாஷ் சோப்ரா கருத்து

லக்னோ சூப்பர் ஜெயட்ன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கே.எல் ராகுல் அந்த அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேறினார். பின்னர் மெகா ஏலத்திற்கு வந்த அவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஒரு பெரிய தொகைக்கு ஏலத்தில் போட்டியிட்டு தங்களது அணிக்குள் கொண்டு வந்தது.

கே.எல் ராகுல் விளையாட வேண்டிய இடம் இதுதான் : ஆகாஷ் சோப்ரா

அதோடு டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பையும் அவரிடம் வழங்க அந்த அணியின் நிர்வாகம் தயாராக இருந்தது. ஆனால் தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்றும் தான் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடுவதாக கூறி டெல்லி அணிக்காக கே.எல் ராகுல் மிடில் ஆர்டரில் இடம்பிடித்து விளையாடியிருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் 13 ஆட்டங்களில் விளையாடிய அவர் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதம் என 53 ரன்கள் சராசரியுடன் 149 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 539 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மிடில் ஆர்டரில் டெல்லி அணிக்கு பக்கபலமாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அடுத்த ஆண்டு அவர் துவக்க வீரராக விளையாட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் கே.எல் ராகுல் விளையாட கூடாது. அவர் ஓப்பனராக விளையாடினால் அந்த அணிக்கு அது மிகவும் நல்லதாக அமையும். அதே வேளையில் டெல்லி அணியில் கருண் நாயர், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா போன்ற வீரர்கள் இருக்கும் வேளையில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனையும் மிடில் ஆர்டரில் எடுத்துக் கொண்டால் டெல்லி அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலப்படும்.

- Advertisement -

இதன் காரணமாக கே.எல் ராகுலை துவக்க வீரராக களம் இறக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஒரு பவர் ஹிட்டரை அந்த அணி மிடில் ஆர்டரில் கொண்டு வந்தால் நிச்சயம் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் வலுவடையும். அதேபோன்று பந்து வீச்சிலும் அந்த அணியிடம் மோகித் சர்மா, முகேஷ் குமார், டி.நடராஜன் ஆகிய இந்திய வீரர்கள் இருக்கின்றனர்.

இதையும் படிங்க : 15 ஓவர்கள் முன்கூட்டியே முடிவுக்கு வந்த முதல் நாள் ஆட்டம்.. வலுவான நிலையில் இந்தியா – விவரம் இதோ

அதோடு அந்த அணியின் சுழற்பந்து பந்துவீச்சு யூனிட்டும் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. அந்தவகையில் குல்தீப் யாதவ், அக்சர் படேல், விப்ராஜ் நிகம் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதும் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -