ரசல் தடுமாறிய பிட்ச்சில் மிரட்டிய துபேவை 2024 டி20 உலகக் கோப்பையில் செலக்ட் பண்ணுங்க.. முன்னாள் வீரர்

Shivam Dube 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 3வது வெற்றியை பதிவு செய்தது. ஏப்ரல் 8ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடந்த 22வது லீக் போட்டியில் வலுவான கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. முன்னதாக மற்ற அணிகளில் தடுமாறிய சிவம் துபே கடந்த வருடம் சென்னைக்காக கேரியரில் உச்சகட்டமாக 35 சிக்ஸருடன் 418 ரன்கள் குவித்து 5வது கோப்பையை வெல்ல உதவினார்.

அதன் காரணமாக இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுத்த அவர் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் 2024 ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் வெற்றி பெற உதவினார். அதே ஃபார்மில் இந்த வருடமும் அசத்தும் அவர் இதுவரை 5 போட்டிகளில் 13 சிக்ஸருடன் 176 ரன்களை 176 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி வருகிறார்.

- Advertisement -

அசத்தும் துபே:
குறிப்பாக சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவுக்கு ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங் போன்ற சரவெடியாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் கூட ஒரு சிக்ஸர் அடிக்கவில்லை. அதே போல வெறும் 138 ரன்களை துரத்திய சென்னைக்கு ரச்சின் ரவீந்தரா, 67* (58) ரன்கள் குவித்த கேப்டன் ருதுராஜ் ஆகியோரும் சிக்ஸர் அடிக்க முடியாமல் தடுமாறினார்கள்.

ஆனால் அதே பிட்ச்சில் தம்முடைய ஸ்டைலில் விளையாடிய சிவம் துபே 1 பவுண்டரி 3 சிக்சர்களை பரக்கவிட்டு 28 (18) ரன்கள் விளாசினார். இந்நிலையில் அப்படி ரசல் சிக்ஸர் அடிப்பதற்கு தடுமாறிய பிட்ச்சில் சிக்ஸர்களை பறக்க விட்ட துபே இல்லாமல் 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணி தேர்வு செய்வது கடினம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உலகக் கோப்பையில் அவரை தேர்ந்தெடுக்காமல் இருப்பது சாத்தியமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் அவரை எதை வைத்து கழற்றி விடுவீர்கள்? அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பாருங்கள். நிறைய பேர் அவருடைய சுதந்திரம் கொடுக்கப்படுவது பற்றி பேசுகிறார்கள். ஆனால் அதே சுதந்திரத்தை பெறும் வீரர்கள் துபேவை போல் சிக்ஸர் அடிப்பதை காட்ட முடியுமா? ஆண்ட்ரே ரசல் உட்பட அப்போட்டியில் விளையாடிய அனைவரும் தடுமாறினார்கள்”

இதையும் படிங்க: கடவுள் பொறுப்பில்.. சிஎஸ்கே கோப்பை ஜெயிக்கனும்ன்னா அதை செஞ்சாகனும்.. ருதுராஜுக்கு மைக்கேல் வாகன் அட்வைஸ்

“அதை பார்க்கும் போது மைதானம் பெரிதாகவும் பிட்ச் சிக்ஸர்களை அடிப்பதற்கு கடினமானதாகவும் இருப்பது போல் தெரிந்தது. சிவம் துபேவுக்கு அப்படி தெரியவில்லை. சரியான பந்துகளை தேர்ந்தெடுத்து அதை ரசிகர்கள் கூட்டத்தில் விழும் அளவுக்கு அடிக்கும் அவர் வேகப்பந்து வீச்சாளர்களையும் அதிரடியாக எதிர்கொள்கிறார். அவர் தன்னை தேர்வாளர்கள் உலகக் கோப்பைக்கு அழைத்துச் செல்ல கட்டாயப்படுத்தி வருகிறார்” என்று கூறினார். முன்னதாக சேவாக், யுவராஜ் சிங் ஆகியோரும் துபே உலக கோப்பையில் விளையாட வே

Advertisement