இனி இந்திய அணியின் முக்கிய வீரராக இவரே இருப்பார். இவரே நம்பிக்கை நாயகன் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் சிறப்பாக நடந்து முடிந்தன. இந்நிலையில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. டி20 தொடரை இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் சிறப்பாக விளையாடி கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு ஹர்திக் பாண்டியா மற்றும் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் தான் முக்கிய காரணம். ஹர்திக் பாண்டியா டி20 தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் இளம் வீரரான ஹர்திக் பாண்டியா அறிமுகமான சில காலங்களிலே தனக்கென நிரந்தர இடத்தை பெற்றவர்.

Pandya-1

- Advertisement -

இவர் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான கபில்தேவுடன் ஒப்பிடும் அளவிற்கு திறமை கொண்டிருந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் பல சர்ச்சைகள் காரணமாக பல பிரச்சினைகளையும் எதிர்கொண்டவர். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றிருக்கிறார்.

தற்போது இந்த தொடர் முழுவதுமே ஒரு முழுநேர பேட்ஸ்மேனாகவே அவர் களமிறங்கினார். கடந்த ஆண்டு முதுகு பகுதியில் செய்து கொண்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் 16 மாதங்களாக அவர் பந்துவீசுவது கிடையாது. இருப்பினும் அதிரடியான பேட்டிங்கில் அசத்தி வருகிறார். ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி சிறப்பான வெற்றிகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ஆகாஷ் சோப்ரா மற்றும் ஜாகீர்கான் ஆகியோர் பாண்டியாவை பாராட்டி வருகின்றனர்.

Wade

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்து கூறியுள்ளார். அவர் கூறுகையில் : “ஹர்திக் பாண்டியாவின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக உருவாகி வருகிறார். விராட் கோலி, பும்ரா மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களை விட ஹர்திக் பாண்டியா மிக முக்கியமான வீரராக மாறும் வாய்ப்பு இருக்கிறது.

Pandya-4

ஹர்டிக் பாண்டியா தனது தொடர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணி t20 உலக கோப்பை தொடரை வெல்ல முடியும்” என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா. மேலும் தோனியின் பினிஷிங் வீரர் என்ற இடத்தை ஹர்டிக் பாண்டியா வெகுவிரைவில் எட்டி பிடிப்பார் என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் அவரை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement