இந்த ஒரு விடயம் போதும். ஹார்டிக் பாண்டியாதான் இந்தியாவின் மதிப்பு மிக்க டி20 பிளேயர் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

Aakash-Chopra-and-Hardik-Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹார்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே முதுகு பகுதியில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக பந்து வீசாமல் இருந்து வந்த ஹர்திக் பாண்டியா 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் மும்பை அணிக்காக பந்து வீசாமல் பேட்ஸ்மேனாகவே செயல்பட்டு வந்தார். அதோடு கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முடிந்த உலக கோப்பை தொடரிலும் அவர் பெரிய அளவில் பந்து வீசாமல் இருந்தார்.

Hardik Pandya

- Advertisement -

அதனால் அவரது இடம் பெரிய கேள்விக்குறியை எழுப்பியது. அதனைத்தொடர்ந்து இந்திய அணியில் இருந்து தானாக முன்வந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்துக் கொண்ட பாண்டியா மீண்டும் தான் முழு பிட்னஸோடு வந்த பின்பு தன்னை அணியில் தேர்வு செய்யுமாறு கூறியிருந்தார். அதன்படி நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான பிட்னஸ் உடன் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய பாண்டியா குஜராத் அணியை கேப்டனாக நின்று வழி நடத்தினார்.

அப்படி கேப்டனாக விளையாடிய முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியதோடு மட்டுமில்லாமல் தனிப்பட்ட முறையில் பேட்டிங்கில் குஜராத் அணிக்காக பெரிய அளவில் ரன்களை குவித்தார். அதோடு பந்து வீச்சிலும் அசத்தினார். இப்படி தொடர்ச்சியான அசத்தல்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். அதன்படி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த 5 போட்டிகள் கண்ட டி20 தொடரிலும் அசத்தலாக விளையாடினார்.

Hardik Pandya Bowling

இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேப்டனாகவும் செயல்பட்டு வென்று காண்பித்தார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரிலும் அசத்தலாக விளையாடி வரும் அவரை இந்தியாவின் மதிப்புமிக்க டி20 வீரர் என்று முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

தற்போது உள்ள சூழலில் ஹர்டிக் பாண்டியாவை யாருடனும் ஒப்பிட முடியாது. ஏனெனில் அவர் 100% முழு உடல் தகுதியுடன் இருக்கும் போது எந்த ஒரு வீரருக்கு எதிராகவும் ஹர்திக் பாண்டியாவை நிற்க வைத்து சவால் விடலாம். அந்த அளவிற்கு அவர் மிகச் சிறப்பான வீரர். தற்போதைய இந்திய அணியின் மதிப்பு முக்கிய டி20 வீரர் என்றால் நான் ஹர்திக் பாண்டியாவை தான் கூறுவேன். அதற்கு சாட்சி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் பேட்டிங்கில் 50 ரன்கள் அடித்ததும், பவுலிங்கில் நான்கு விக்கெட்டுகள் எடுத்ததுமே அவரது திறமைக்கு ஒரு சான்று.

இதையும் படிங்க : விராட் கோலி இந்தவொரு தப்பை மட்டும் செய்ஞ்சா அவரோட இடம் காலிதான் – புதிதாக வந்த பிரச்சனை

இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தக்கூடிய அவரால் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் தனது ஆதிக்கத்தை செலுத்தி விளையாட முடியும் என்றும் நிச்சயம் இனி வரும் போட்டிகளிலும் பாண்டியா இதே போன்ற ஃபார்மை கண்டிப்பாக தொடர்ச்சியாக வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையும் உள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement