விராட் கோலிக்கு பதிலாக டெஸ்ட் போட்டிகளில் இவரே விளையாட வேண்டும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துவிட்டது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணியும், டி20 தொடரில் இந்திய அணியும் தொடரை கைப்பற்றி விட்டன. கடைசி டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 17ஆம் தேதி முதல் இந்த இரு அணிகளுக்கிடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க போகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்க உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

nattu

- Advertisement -

ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் போட்டியில் மட்டுமே பங்கேற்பார் என்றும் அடுத்த மூன்று போட்டிகளுக்கு அவர் ஆஸ்திரேலியாவில் இருக்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஏனெனில் அவருக்கு குழந்தை பிறக்கப்போகிறது அந்த நேரத்தில் தனது மனைவியுடன் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு அவருக்கு பதிலாக ரோகித் சர்மா அணியில் சேர்த்துக் கொள்வதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

மேலும் ரோஹித் சர்மா காயம் தற்போது வரை சரியாகவில்லை என்றும் அதனால் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டுமே அவரால் விளையாட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விஷயமும் டிசம்பர் 11ஆம் தேதிதான் உறுதியாக கூறமுடியும் என்று பிசிசிஐ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இன்னும் டெஸ்ட் தொடர் துவங்க 9 நாட்களே உள்ள நிலையில் சரியான அணி அமையாதது ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Kohli-2

இந்நிலையில் ரோகித் சர்மாவிற்கு பதில் சுப்மன் கில் தான் விராட் கோலியின் இடத்திற்கு சரியாக இருப்பார் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறுகையில் : விராட் கோலியும் முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியாவிற்கு வருகிறார். மீதமுள்ள போட்டிகளில் இவருக்கான மாற்று வீரர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரையில் சுப்மன் கில் அந்த இடத்தை நிரப்ப சரியாக இருப்பார்.

gill 1

அப்படியே இல்லை என்றாலும் கே எல் ராகுல் தொடக்க வீரராக கள்மிறங்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பிருத்வி ஷா மிகச் சிறப்பாக விளையாட வேண்டும் இல்லையென்றால் அடுத்தடுத்த போட்டிகளில் அணியிலிருந்து வெளியேற்றப்படுவார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் பயிற்சி ஆட்டத்தில் சுப்மன் கில் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி டக் அவுட் ஆக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement