டெஸ்ட் அணியில் நேரடியாக இவரை தேர்வு செய்தது தவறு. அப்போ மத்த பிளேயர்ஸ் எல்லாம் வேஸ்ட்டா ? – சோப்ரா கேள்வி

Chopra

இந்திய அணி டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் பெரும்பாலும் இளைஞர்களே இருந்தனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த வருடம் இந்த முறை அதிகப்படியான வீரர்களை இந்திய அணி ஒன்றாக அழைத்துச் செல்கிறது மொத்தம் 31 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

INDvsAUS

இதில் தமிழக வீரர்கள் தங்கராசு நடராஜன், வாசிங்டன் சுந்தர் வரும் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடிய கே. எல். ராகுல் அனைத்துவிதமான போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான துணைக்கேப்டனாகவும் அவர் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகை போட்டிகளிலும் இவர் ஆடப் போகிறார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

Rahul

வழக்கமாக இப்படி சர்ச்சைக்கு கருத்துக்களை பதிவு செய்வதில் வல்லவரான இவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 5 தொடர்களில் சராசரி 29 கீழாகத்தான் வைத்திருக்கிறார் ராகுல். அவரை எப்படி டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்தீர்கள். உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடி வீரர்களை விட்டுவிட்டு ஐபிஎல் தொடரில் ஆடிய செயல்பாட்டை வைத்து எப்படி டெஸ்ட் போட்டிகளில் கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார் என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

- Advertisement -

Rahul

இதனை கண்ட ரசிகர்கள் வழக்கமான உங்களது வேலையை ஆரம்பித்து விட்டீர்களா ? என்று அவரை கழுவி ஊற்றிய வருகின்றனர். ஆனால் ராகுல் அதற்கு முன்னதாகவே டெஸ்ட் போட்டிகளில் தன்னை நிரூபித்தவர். அதுமட்டுமின்றி ராகுலின் முதல் சதம் ஆஸ்திரேலியா மண்ணில் தான் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.