இக்கட்டான நேரத்தில் கேஷூவலா விளையாடுறாரு. அவரிடம் பயமே இல்ல – இளம்வீரரை பாராட்டிய ஆகாஷ் சோப்ரா

Chopra

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகளில் விளையாடியது. ஒரு தொடரில் கூட வெற்றி பெற முடியாமல் அனைத்து தொடரிலும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது. உலகின் நம்பர் ஒன் அணியாக திகழ்ந்து வரும் இங்கிலாந்து அணியை இந்திய அணியால் வீழ்த்த முடியாது என்கிற கணிப்பை பொய்யாக்கும் வண்ணம் இந்திய அணி அனைத்துவித தொடரையும் கைப்பற்றியது.

ind

டெஸ்ட் தொடரை 3-1 என்கிற கணக்கிலும், டி20 தொடரை 3-2 என்கிற கணக்கிலும், பின்னர் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரை 2-1 என்கிற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்திய அணி மிக சிறந்த வகையில் அனைத்து விதமான தொடர்களிலும் பங்காற்றியது. சீனியர் கிரிக்கெட் வீரர்கள் ஒரு பக்கம் அசத்தி வந்தாலும் மறுபக்கம் இளம் வீரர்கள் மிக சிறப்பாக விளையாடினர்.

குறிப்பாக ரிஷப் பண்ட் , அக்ஷர் பட்டேல் , வாஷிங்டன் சுந்தர் , சூர்யகுமார் யாதவ் , பிரசித் கிருஷ்ணா , ஷர்துல் தாகூர் போன்ற இளம் வீரர்கள் மிக சிறப்பான வகையில் தொடர் முழுவதும் நன்றாக விளையாடினார். இருந்தபோதிலும் பண்ட் மிக மிக சிறப்பாக இந்த தொடர் முழுவதும் விளையாடினார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் ரிஷப் பண்ட் குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா :

pant 1

ரிஷப் பண்ட் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும் பொழுது மிக கேஷுவலாக வந்து விளையாடி செல்கிறார். அவர் ஆட்டத்தில் பயத்தை காணவே முடியவில்லை. ஒரு பக்கம் ஆட்டம் எப்படி பட்ட நிலையில் சென்று கொண்டிருந்தாலும், மறு பக்கம் தன்னுடைய ஆட்டத்தை தனக்கே உரிய பாணியில் காட்டி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்கிறார்.மேலும் இதை இவர் வரும் காலங்களிலும் செய்து இந்திய அணியின் மிகப்பெரிய நம்பிக்கை பேட்ஸ்மேனாக வலம் வருவார் என்று கூறி முடித்தார்.

- Advertisement -

pant 1

இங்கிலாந்துக்கு எதிரான ஒட்டுமொத்த தொடரில் அதிகபட்ச ஸ்கோர் செய்த 3 இந்திய வீரர்களுள் ரிஷப் பண்டும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.விராட் கோலி – 532 ரன்கள் , ரிஷப் பண்ட் – 527 ரன்கள் , ரோகித் சர்மா – 526 ரன்கள்