டி20 உலகக்கோப்பையில் இவரை ஓப்பனராக களமிறக்குங்கள். இந்திய அணிக்கு வெற்றி உறுதி – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

Chopra
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் நடத்த முடியாது என்று கணிக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்படும் என ஐசிசி ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

cup

- Advertisement -

இந்திய அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களைக் கொண்டு அணியை கட்டமைத்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த பின்னர் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி தேவை ஏற்படுமாயின் நான் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவுடன் துவக்க துவக்க வீரராக களம் இறங்குவேன் என அதிரடியாக அறிவித்து இருந்தார்.

ஏனெனில் அவ்வப்போது ராகுல் மற்றும் தவான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்கள் இருவரும் சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கோலி இதுபோன்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது டி20 உலக கோப்பை தொடரில் விராத் கோலி துவக்க வீரராக களம் இறங்க கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சோப்ரா தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

rohith

இதுகுறித்து அவர் கூறுகையில் : கோலி வழக்கம்போல் 3-வது இடத்தில் களம் இறங்க வேண்டும் அதுவே அணிக்கு நல்ல சமநிலையை தரும். மேலும் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் ராகுல் களமிறங்கினால் அதுவே சரியாக இருக்கும். ஏனெனில் ராகுல் ரோஹித் ஆகியோர் துவக்க வீரராக விளையாடும் பட்சத்தில் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், பண்ட் ஆகியோர் மிடில் ஆர்டரில் அணியை பலப்படுத்துவார்கள்.

Rahul 1

இதன் காரணமாக கோலி தனது இடத்தை மாற்றிக் கொள்ளாமல் மூன்றாவது இடத்திலேயே விளையாட வேண்டும் என்றும் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தனது கருத்தைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement