சூரியகுமார் யாதவ் வேண்டாம். அவரை விட இவரே 4 ஆவது இடத்திற்கு கரெக்ட்டா இருப்பார் – ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் வேளையில் இந்திய அணி நிர்வாகமும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை மும்முரமாக அலசி ஆராய்ந்து வருகிறது. தற்போது உலக கோப்பை தொடருக்கு முன்னர் ஸ்ரீலங்கா தொடருக்காக பல இளம் வீரர்களை சோதனை முன்னோட்டமாக அனுப்பி வைத்துள்ளது பி.சி.சி.ஐ ஆனாலும் இந்த அணியில் மிகப்பெரிய பிரச்சனையான இடமாக பார்க்கப்படுவது நான்காவது இடம் தான்.

INDvsSL

- Advertisement -

பல ஆண்டுகளாகவே நான்காவது இடத்தில் இறங்கும் வீரர்கள் குறித்த பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் நிலையில் தற்போது இந்த உலக கோப்பை தொடரிலும் 4-வது வீரராக யார் இறங்குவார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஏனெனில் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக கடந்த சில தொடர்களாக விளையாடாமல் இருக்கின்றார். அதே வேளையில் அவருக்கு பதிலாக இங்கிலாந்து தொடரில் 4-வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் அசரவைத்தார்.

இதனால் காயத்தில் இருந்து மீண்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் இடம் தருவதா அல்லது தற்போது சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ்க்கு வாய்ப்பு தருவதா என நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது. இந்நிலையில் இதற்கு தெளிவு தரும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது பார்வையில் இருந்து உலக கோப்பை டி20 தொடரில் 4-வது வீரராக யார் இறங்க வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

sky 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த முடிவு எடுப்பது மிக மிக கடினமான ஒன்று. மேலும் நான் தேர்வுக் குழுவிலும் இடம் பெறவில்லை. எனவே இந்திய அணியின் தேர்வாளர்கள் தான் இறுதியாக அந்த முடிவை எடுக்கப் போகிறார்கள் என்றாலும் என்னைப் பொறுத்தவரை நான் கூறுவது யாதெனில் ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். அதேபோன்று கோலி மூன்றாவது இடத்திலும், ஹார்டிக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் 5,6 இடங்களில் களம் இறங்குவார்கள்.

iyer

இந்த நான்காம் இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சூர்யகுமார் யாதவ் இருவரில் யார் என்று என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் ஷ்ரேயாஸ் ஐயர் தான் களமிறங்க வேண்டும் எனக் கூறுவேன். ஏனெனில் இந்திய அணியில் உள்ள மற்ற இளம் வீரர்களைக் காட்டிலும் ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல அனுபவம் கொண்டவர். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் டெல்லி அணியை வழிநடத்தி உள்ளார் என்பதால் அவரால் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 4வது இடத்தில் சிறப்பாக விளையாட முடியும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement