- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தம்பி அபிஷேக் இதான் முக்கிய சான்ஸ்.. உங்க மூச்சை ஜெய்ஸ்வால் வெச்சுருக்காரு.. ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் துவக்க வீரர்களாக சமீபத்தில் அடுத்தடுத்த சதங்களை அடித்த சஞ்சு சாம்சன் விளையாட உள்ளார். அவருடன் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா துவக்க வீரராக களமிறங்க உள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் வெளுத்து வாங்கிய அவர் இந்திய அணிக்காக ஜிம்பாப்வே மண்ணில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் முதல் போட்டியிலேயே டக் அவுட்டான அவர் அடுத்த போட்டியில் சதமடித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் தொடர்ந்து சுமாராக விளையாடிய அவர் கடந்த தென்னாப்பிரிக்க தொடரின் ஒரு போட்டியில் அரை சதமடித்து அசத்தார்.

- Advertisement -

போட்டிக்கு ஜெய்ஸ்வால்:

இந்நிலையில் இப்படி தொடர்ச்சியாக அதிரடியாக விளையாட தடுமாறும் அபிஷேக் சர்மாவுக்கு போட்டியாக ஜெய்ஸ்வால் இருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். எனவே இந்த இங்கிலாந்து தொடரில் ஜெய்ஸ்வால் இல்லாததை பயன்படுத்தி அபாரமாக விளையாடி அபிஷேக் ஷர்மா தமது இடத்தை நிரந்தரமாக்க வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு.

“அபிஷேக் ஷர்மா தன்னம்பிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை நான் விரும்புகிறேன். இருப்பினும் அவர் நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஜெய்ஸ்வால் அவரை நிம்மதியாக மூச்சு விடுவதற்கு விட மாட்டார். ஏனெனில் அவரைப் போலவே இடது கை வீரரான ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடக் கூடியவர்”

- Advertisement -

நல்ல வாய்ப்பு:

“தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடியவர். சில நேரங்களுக்குப் பின் ஒரு இந்திய ரசிகனாக நீங்கள் ரோஹித் – கில் இருப்பதால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கருதுவீர்கள். இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபிக்கும் முன் அவர் எந்த கிரிக்கெட்டை விளையாடப் போகிறார்? என்று நினைப்பீர்கள்”

இதையும் படிங்க: 13000 ரன்ஸ் 50 சதம்.. அதுல முடிசூடா அரசனான கோலி சாம்பியன்ஸ் ட்ராபியில் கம்பேக் கொடுப்பாரு.. கைப் பேட்டி

“ரஞ்சிக் கோப்பை மட்டுமே உள்ளது. இந்த கோணத்தில் யோசிக்கும் போது இது அபிஷேக் ஷர்மாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. இதுவரை அவர் தமக்கு கிடைத்த வாய்ப்புகளை பெரிதாக பயன்படுத்தி கொள்ளவில்லை. ஜிம்பாப்வே மண்ணில் சிறந்த சதத்தை அடித்த அவர் தென்னாப்பிரிக்காவில் ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடினார்” என்று கூறினார். முன்னதாக இதுவரை 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் 256 ரன்களை 23.27 என்ற சராசரியில் மட்டுமே எடுத்து தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -