- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜெய்ஸ்வாலுக்கு ஐபிஎல்’ல இருந்தே இந்த பிரச்சனை இருக்கு.. கில், ரோஹித், கோலிக்கும் ஒரே தீர்வு சொன்ன ஆகாஷ் சோப்ரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அத்தொடரில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸிலேயே டக் அவுட்டானார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் தவறை திருத்திக் கொண்டு விளையாடிய அவர் 161 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அதனால் தொடர்ச்சியாக அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் அதற்கடுத்த போட்டியில் தடுமாற்றமாக விளையாடினார். குறிப்பாக மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிராக ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாட முயற்சித்த அவர் தன்னுடைய விக்கெட்டை பரிசளித்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரிலேயே இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஜெய்ஸ்வால் பலவீனத்தை கொண்டிருந்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் பலவீனம்:

அதே போல சுப்மன் கில் 2021 காபா போட்டிக்கு பின் இதுவரை வெளிநாட்டு மண்ணில் ஒருமுறை கூட 40 ரன்கள் தாண்டியதில்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இதற்கிடையே விராட் கோலி, ரோஹித் சர்மாவும் தடுமாறுவது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இவை அனைத்திற்கும் களத்தில் நேரத்தை செலவிட்டு நல்ல பந்துகளை மதித்து நங்கூரமாக விளையாடுவதே ஒரே தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஜெய்ஸ்வால் பிரச்சினையைக் கொண்டுள்ளார் என்பது உண்மையாகும். அது இப்போது துவங்கவில்லை. அது ஐபிஎல் தொடரிலும் நடந்தது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மிட்சேல் ஸ்டார்க்கிடம் மட்டும் அவருக்கு இந்த பிரச்சனை இல்லை. அவர்களுக்கு எதிராக ஜெயஸ்வால் புள்ளி விவரங்களும் நன்றாக இல்லை”

- Advertisement -

ஒரே தீர்வு:

“ஸ்டார்க் தற்போது முன்பை விட துல்லியமாக பந்து வீசுவதால் ஜெய்ஸ்வால் அதில் சிக்கினார். சுப்மன் கில் ஆசிய கண்டத்திற்கு வெளியே மூன்று வருடங்களாக 16 – 17 இன்னிங்ஸ்களில் 40 ரன்கள் கூட தாண்டவில்லை. கடைசியாக காபாவில் அவர் பெரிய ரன்கள் குவித்த போது இந்தியாவும் தொடரை வென்றது. எனவே அவர் மீது எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதற்கு மத்தியில் அவர் நன்றாக விளையாடினாலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை”

இதையும் படிங்க: ரோஹித் சொன்னது உண்மையில்ல.. விராட் கோலியால் அந்த பிரச்சனையை தனியாளா தீர்க்க முடியாது.. சஞ்சய் மஞ்ரேக்கர்

“அந்த வகையில் ஜெய்ஸ்வால், விராட் கோலி தடுமாறுகிறார்கள். சுப்மன் கில் போல ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் இன்னும் ரன்கள் குவிக்கவில்லை. இவை அனைத்திற்கும் களத்தில் உங்களுக்கு நீங்களே கொஞ்சம் நேரம் கொடுத்து விளையாடுவதே தீர்வாகும்” என்று கூறினார். மொத்தத்தில் இந்தத் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே முதல் 3 போட்டிகளில் தொடர்ந்து அசத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -