- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மனிதனா அந்த எல்லாத்தையும் செஞ்ச ஸ்ரேயாஸ் ஐயர்.. கண்டிப்பா 2026 டி20 உ.கோ டீம்ல இருப்பாரு.. ஆகாஷ் சோப்ரா

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டது பெரிய விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. ஏனெனில் 2024 ஐபிஎல், சயீத் முஷ்டாக் டி20 கோப்பைகளை கேப்டனாக வென்ற அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் அடித்து 12 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.

அதே வேகத்தில் 2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். அப்படியிருந்தும் ஆசியக் கோப்பை தொடருக்கான ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடத் தடுமாறிய சுப்மன் கில் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

- Advertisement -

எல்லாத்தையும் செஞ்சுட்டாரு:

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு மனிதனால் கிரிக்கெட்டில் செய்யக்கூடிய அனைத்தையும் சிறப்பாக செய்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது மிகப்பெரிய ஆச்சரியம் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ஆனால் இங்கிருந்து நிலைமைகள் மாறி, யாராவது காயமடைந்து 2026 டி20 உலகக் கோப்பையில் ஸ்ரேயாஸ் கண்டிப்பாக விளையாடுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் அணியில் இல்லாதது பெரிய கதை. இதற்கு மேலும் ஸ்ரேயாஸ் என்ன செய்ய வேண்டும்? ஏனெனில் ஐபிஎல் தொடரில் 600+ ரன்கள் அடித்த அவர் தன்னுடைய அணியை ஃபைனல் அழைத்துச் சென்றார். சயீத் முஸ்தாக் அலி கோப்பையில் ரன்கள் அடித்த அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி சாம்பியன்ஸ் டிராபியை வென்றார். ஒரு மனிதனாக உங்களால் இதை மட்டுமே செய்ய முடியும்”

- Advertisement -

உலகக் கோப்பையில் இருப்பாரு:

“இந்த ஆசிய கோப்பை அணி உலகக் கோப்பையுடன் இணையாது. ஏனெனில் இங்கிருந்து 15 டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. எனவே ஸ்ரேயாஸ் அடுத்ததாக தாம் விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பையில் அங்கமாக இருப்பார் என்று நான் வலுவாக நம்புகிறேன். உண்மையில் அவருடைய பெயர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இல்லாதது ஆச்சரியமானது”

இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவரை ஏன் சேக்கல?.. அவரு செம பார்ம்ல இருக்காரு – ஹர்பஜன் கருத்து

“15 பேர் கொண்ட அணியில் உங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவருடைய பெயர் குறைந்தபட்சம் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இருந்திருக்க வேண்டும். அந்தப் பட்டியலில் கூட அவருடைய பெயர் இல்லாதது நல்ல அறிகுறி கிடையாது. ஸ்ரேயாஸ் ஐயர் டி20 அணியில் முழுமையாக இல்லை என்பதே அதற்கான அர்த்தமாகும்” என்று கூறினார்.

- Advertisement -