இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயேக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதனால் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணி தயாராக இருக்கிறோம் என்பதையும் காண்பித்துள்ளது.
மேலும் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பியதும் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இருப்பினும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்திலிருந்து கம்பேக் கொடுத்தது முதல் இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தாதது கவலையளிக்கும் விஷயமாக இருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்த ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டு 14 மாதங்கள் கழித்து தற்போது விளையாடி வருகிறார்.
ஷமியின் வேகம்:
இருப்பினும் அந்த வாய்ப்பில் இதுவரை அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தின் டெயில் எண்டரான அடில் ரசித் டெத் ஓவரில் ஷமி எதிராக ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்தார். முஹமது ஷமியின் வேகம் குறைந்ததே அதற்கு காரணம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அதற்கு பேசாமல் புவனேஸ்வர் குமார் விளையாடலாம் என்றும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நமது வேகப்பந்து வீச்சாளர்களால் நாம் எந்தளவுக்கு தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம்? ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாதது கண்டிப்பாக வலியைக் கொடுக்கும் என்பது உண்மை. ஆனால் அவர் இல்லாமல் நம்முடைய வேகபந்து வீச்சு பலவீனமாக இருப்பதையே இந்தத் தொடரில் பார்த்துள்ளோம்”
தாக்கம் இல்லையே:
“ஷமி கம்பேக் கொடுத்தது முதல் இன்னும் டாப் கியரை எட்டவில்லை. அதை விரைவில் எட்டுவார் என்று நம்புகிறோம். அவரது வேகம் குறைந்துள்ளது. 132 கிலோமீட்டர் வேகத்தில் புவனேஸ்வர் வீசினால் அபாரமாக இருக்கும். ஏனெனில் அந்த வேகத்தில் அவர் துல்லியமாக இருப்பார். ஆனால் அதே வேகத்தில் ஷமியால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஏனெனில் 137 – 138 கி.மீ வேகத்தில் தான் அவரால் பந்தை நகர்த்தி சிறந்த ஆட்டத்தை கொண்டு வர முடியும்”
இதையும் படிங்க: 1996 இலங்கை அணி இப்போதைய இந்தியாவை 3 நாளில் சாய்க்கும்.. அது நம்மை அழிக்கப் போகுது.. ரணதுங்கா பேட்டி
“ஷமி தற்சமயத்தில் நன்றாக பவுலிங் செய்யவில்லை. அடில் ரசித் போன்றவர் அவரை 3 தொடர்ச்சியான பவுண்டரிகள் அடித்தால் அவர் இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம். ரன்களையும் வாரி வழங்குவதால் அவரிடம் கேப்டனால் 10 ஓவர்கள் வழங்க முடியவில்லை என்பது பிரச்சனையாகும். அந்த வகையில் அவர் எப்போது தயாராவார்? ஷமி தனது சிறந்ததிலிருந்து கொஞ்சம் தடுமாறுகிறார்” என்று கூறினார்.



