- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கேப்டன் பதவி 100% காலி, விராட் கோலி செஞ்ச தப்ப நீங்களும் பண்ணிருக்கீங்க – ரோஹித்தை விளாசிய ஆகாஷ் சோப்ரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் மண்ணை கவ்வி வெளியேறியுள்ளது. அந்தப் போட்டியில் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பிய இந்தியாவுக்கு டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் அதை சரியாக பயன்படுத்தாத ரோகித் சர்மா தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்ந்தெடுக்காதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மேலும் பேட்டிங்கிலும் கேப்டனாக முன்னின்று ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் பதவி விலக வேண்டுமென நிறைய கோரிக்கைகள் காணப்படுகின்றன. ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 3 இரட்டை சதங்களை அடித்த பெருமை கொண்ட அவர் சமீப காலங்களாகவே பேட்டிங்கில் அதிரடியாக செயல்பட முடியாமல் சுமாராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் கடந்த 4 – 5 வருடங்களாகவே தடுமாற்றமாக செயல்படும் அவர் இந்த வருடம் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார். அதை விட 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதால் இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுப்பார் என்ற நோக்கத்தில் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

பிளேயிங் லெவனில் இடம்:
ஆனால் அவரது தலைமையில் சாதாரண இரு தரப்பு தொடர்களில் வழக்கம் போல வெற்றிகளை பதிவு செய்த இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றில் தோற்றதை போலவே தற்போது இந்த ஃபைனலில் தோற்றுள்ளது. அதனால் சுமாரான ஃபிட்னஸ் கடைப்பிடித்து அடிக்கடி ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்திருப்பதுடன் 36 வயதை கடந்த அவருக்கு பதிலாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலையை தொடங்கியுள்ள பிசிசிஐ வரும் டிசம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் புதிய கேப்டனை நியமிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விராட் கோலி – ரவி சாஸ்திரி ஆகியோர் இந்திய மண்ணில் சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைத்து இரண்டரை நாட்களில் வென்ற அதே தவறை ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் செய்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதுவே ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்தில் நடைபெற்ற ஃபைனலில் தோற்க முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் அவர் 36 வயதை கடந்து விட்ட ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் 100% கேப்டனாக தொடர்வதற்கு வாய்ப்பில்லை என கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோஹித் சர்மா நல்ல கேப்டன். போட்டியின் உயிர்நாடியை புரிந்து கொள்ளும் தன்மை கொண்ட அவர் பெரும்பாலும் பொதுவான தவறுகளை செய்வதில்லை. அந்த வகையில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் கேள்வியில்லை. மாறாக அனைத்தும் அது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தேர்வு செய்த தவறான 11 பேர் அணியாகும். அடுத்த கேள்வி என்னவெனில் சொந்த மண்ணில் விளையாடிய பிட்ச்களாகும். இந்த முடிவுகள் அணி நிர்வாகத்தால் எடுக்கப்படும் நிலையில் விராட் கோலி கேப்டனாக இருந்த போது ரோகித் சர்மாவும் அதில் ஒருவராக இருந்திருப்பார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்”

“தற்போது விராட் கோலியும் புதிய அணி நிர்வாகத்தில் ஒருவராக இருப்பார். இருப்பினும் தோல்வியின் தவறு அனைத்தும் டாஸ் முடிவில் இருந்தது. அந்த வகையில் விராட் கோலி – ரவி சாஸ்திரி ஆகியோர் செயல்பட்டது போலவே ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் செயல்படுவது சோகமான எதார்த்தமாகும். ரோகித் சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை”

இதையும் படிங்க:Ashes 2023 : சீட்டிங் செய்து சிக்கினாரா மொய்ன் அலி? கம்பேக் போட்டியில் பிறந்தநாளில் பரிதாபம் – ஐசிசி அதிரடியான 2 தண்டனை

“ஆனால் 100% அவர் கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அடுத்தடுத்த ஃபைனலுக்கு நாம் தகுதி பெற்றாலும் அதில் ஒன்றில் கூட வெல்லவில்லை. மேலும் வயதை தன் பக்கம் வைத்திருக்காத ரோஹித் சர்மா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விரும்பினால் மட்டுமே சாதாரண வீரராக விளையாட முடியும்” என்று கூறினார்.

- Advertisement -