- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நல்லவேளை பெர்த்தில் இல்ல.. அடிலெய்ட் தோல்விக்கு முழுசா ரோஹித்தின் இந்த தவறே காரணம்.. ஆகாஷ் சோப்ரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் விளையாடிய இந்தியா சவாலான பெர்த் மைதானத்தில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

ஆனால் 2வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் அவருடைய தலைமையில் இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. தற்போது இந்த தோல்வியையும் சேர்த்து அவரது தலைமையில் இந்திய 4 தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.

- Advertisement -

சுமாரான கேப்டன்ஷிப்:

அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 21ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து 4 போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற தோனி, கோலியின் சாதனையை ரோஹித் சமன் செய்துள்ளார். முன்னதாக அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவாக நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா தோல்விக்கு சுமாரான பேட்டிங் மற்றும் பவுலிங் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் 2வது போட்டியில் சந்தித்த தோல்விக்கு ரோகித் சர்மாவின் மோசமான கேப்டன்ஷிப் மட்டுமே முழுமையான காரணம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். நல்லவேளையாக பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ரோகித் இவ்வாறு கேப்டன்ஷிப் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

மந்தமான ரோஹித்:

“2வது நாள் காலையில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 ஓவர்களை வீசி 1 விக்கெட் எடுத்திருந்தார். ஆனால் அதன் பின் அவர் ஏன் அந்த செஷன் முழுவதும் (உணவு இடைவேளை வரை) பந்து வீசவில்லை? அந்த இடத்தில் நம்முடைய கேப்டன் 100% வெற்றிக்கான சாவியை தவற விட்டார் என்று உங்களால் சொல்ல முடியும். எனவே ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் ஒரு மண்வெட்டியை போல் இருந்தது என்று சுற்றி வளைக்காமல் சொல்லலாம்”

இதையும் படிங்க: அஸ்வினையே மதிக்கல.. இதெல்லாம் ஒரு ஸ்லெட்ஜிங்கா? குப்பை போல செயல்பட்ட சிராஜை விளாசிய ஸ்ரீகாந்த்

“அவரிடம் நாம் அட்டாக் செய்யும் கேப்டன்ஷிப் பார்க்க முடியவில்லை. தடுப்பாட்ட கேப்டன்ஷிப்பை பார்த்தோம். அதனால் அவர் போட்டியை நழுவ விட்டார். பெர்த்தில் ரோஹித் கேப்டனாக இல்லை. எனவே அந்த வெற்றி அவரைச் சேராது. கடந்த நூற்றாண்டை விட்டால் தோனி, கோலி, ரோகித் மட்டுமே தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்தனர். அதிலும் ரோஹித் தலைமையில் சொந்த மண்ணில் எப்போதும் இல்லாத 3 தோல்விகளை சந்தித்தது கவலைக்குரியது. அவருடைய கேப்டன்ஷிப் கொஞ்சம் மந்தமாகவே இருக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -