- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனியின் 6 சதங்கள் இதுக்கு ஈடாகுமா.. ரிஷப் பண்ட் தான் இந்தியாவின் சிறந்த கீப்பர்.. ஆகாஷ் சோப்ரா

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து 634 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார். அந்த வாய்ப்பில் 2வது இன்னிங்ஸில் தம்முடைய 6வது சதத்தை அடித்து 109 ரன்கள் குவித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை சமன் செய்தார்.

சொல்லப்போனால் 90 டெஸ்ட் போட்டிகளில் தோனி அடித்த 6 சதங்களை ரிஷப் பண்ட் வெறும் 34 போட்டிகளில் சமன் செய்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட ரிஷப் பண்ட் தான் சிறந்த விக்கெட் கீப்பர் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர். இருப்பினும் எப்போதும் அவரால் தோனிக்கு நிகராக முடியாது என்று தினேஷ் கார்த்திக், அஜய் ஜடேஜா போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -

தோனி – ரிஷப் பண்ட் கம்பேரிசன்:

ஏனெனில் ரிஷப் பண்ட் 5வது இடத்தில் பேட்டிங் செய்யும் நிலையில் தோனி பெரும்பாலும் 6, 7, 8 போன்ற கீழ் வரிசையில் விளையாடியதாக அஜய் ஜடேஜா கூறினார். இந்நிலையில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய வெளிநாடுகளில் இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆசிய கண்டத்திலிருந்து சதமடித்த முதல் விக்கெட் கீப்பர் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மறுபுறம் தோனி தனது 6 சதங்களில் ஆசிய கண்டத்திற்கு வெளியே ஒரு சதங்கள் கூட அடித்ததில்லை. எனவே இப்போதில்லை என்றாலும் வருங்காலத்தில் ரிஷப் பண்ட் இந்தியாவின் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக போற்றப்படுவார் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனியின் பெயர் தற்போது அந்தப் பட்டியலில் இருக்கிறது”

- Advertisement -

சேனா நாயகன்:

“எனவே அதில் கேள்வி இருக்கிறது. இருப்பினும் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வெளிப்படுத்திய செயல்பாடுகளின் பார்வையில் நீங்கள் பார்க்க வேண்டும். ஏனெனில் நாம் அப்படித்தான் வளர்ந்தோம். ரிஷப் பண்ட் மட்டுமே தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சதமடித்த ஒரே விக்கெட் கீப்பர்”

இதையும் படிங்க: ஸ்கூல் படிக்கும் போதே கிளாஸை கட்டடித்து சேவாக்கை பார்க்க சென்ற ரோஹித் சர்மா – ஏன் தெரியுமா?

“ஏற்கனவே அவர் 6 சதங்கள் அடித்துள்ளார். அதை வெறும் 58 இன்னிங்ஸில் அடித்துள்ளார். எனவே அவர் கண்டிப்பாக மகத்தான கீப்பராக கேரியரை முடிப்பார். அவரைப் பார்த்து ஒவ்வொரு அணியும் கொஞ்சம் பயப்படலாம். ஏனெனில் தொடர்ச்சியாக அசத்தும் அவரைப் போன்ற வீரர் மீது வித்தியாசமான பயம் இருக்கும். அவரைப் போன்றவரை ஆரம்பத்திலேயே அவுட்டாக்காவிட்டால் நாள் முழுவதும் நின்று ரன்கள் குவிப்பார்” என்று கூறினார்.

- Advertisement -