கருண் நாயர் கேயர் கிட்டத்தட்ட முடிஞ்ச்சு.. ஆனா அவரோட கேரியர் மலரப்போகுது.. ஆகாஷ் சோப்ரா பேட்டி

- Advertisement -

இந்தியா ஏ கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் செப்டம்பர் 16, 23 ஆகிய தேதிகளில் லக்னோவில் நடைபெற உள்ள அந்தத் தொடருக்கான இந்தியா ஏ அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் கடந்த சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் அடித்த அவர் 2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். இருப்பினும் ஆசியக் கோப்பையில் அவருக்கு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட கிடைக்காததால் விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

நாயர் கேரியர் ஓவர்:

அதனால் தற்போது கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் தலைமையில் சாய் சுதர்சன், ஜெகதீசன் அபிமன்யு, ஈஸ்வரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்தியா ஏ அணியில் கழற்றி விடப்பட்ட கருண் நாயரின் இந்திய கேரியர் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் 8 வருடங்கள் கழித்து போராடி கம்பேக் கொடுத்த அவர் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் தடுமாற்றமாக விளையாடினார்.

இந்நிலையில் கருண் நாயரின் கேரியர் கிட்டத்தட்ட முடியப்போவதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் ஸ்ரேயாஸ் கேரியர் மலரப்போவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரானப் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துருவ் ஜுரேல் துணைக் கேப்டன். இது போன்ற தொடர்களில் கேப்டனாக இருந்து வந்த அபிமன்யு ஈஸ்வரன் தற்போது வீரராக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்”

- Advertisement -

ஸ்ரேயாஸ்க்கு வாய்ப்பு:

“இப்போதெல்லாம் கேப்டன்ஷிப் பொறுப்பு இசை நாற்காலியாகி விட்டது. இந்திய அணியில் இப்போதும் 3, 6வது இடங்கள் காலியாக உள்ளது. அதை நிரப்பும் நோக்கத்தில் ஸ்ரேயாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுதர்சன், ஈஸ்வரன் ஆகியோர் தேர்வாகியுள்ள நிலையில் கருண் நாயர் இல்லாதது பெரிய முடிவாகும். ஏனெனில் 2வது வாய்ப்பைக் கேட்ட அவர் இங்கிலாந்தில் பரவாயில்லை என்ற வகையிலேயே விளையாடினார்”

இதையும் படிங்க: நொண்டியதை வெச்சு என்னை கழற்றி விடப் பாக்காதீங்க.. கம்பீருக்கு சிக்ஸர்களால் சிக்னல் கொடுத்த சாம்சன்

“இருப்பினும் அடுத்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கருண் இருப்பார் என்று நான் நினைத்தேன். ஆனால் ஃபிட்டாக தேர்வுக்கு தயாராக இருக்கும் அவரை தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கவில்லை. அதனால் தேர்வுக்குழு அவரைத் தாண்டி செல்ல தயாராகி விட்டது போல் தெரிகிறது. ஆசியக் கோப்பையில் தேர்ந்தெடுக்கப்படாததால் ஏற்பட்ட விமர்சனங்களைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் இந்தியா ஏ அணியில் தேர்வாகியுள்ளார். வரும் வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா தொடரில் அசத்தும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கான கதவுகள் நன்றாக திறக்கும். இங்கிருந்து அவர் ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடுவார் என்பது போல் தெரிகிறது” எனக் கூறினார்.

Advertisement