யார் இதை வெளியே சொல்லச் சொன்னா? இங்கிலாந்து பிட்ச் உருவாக்கி இந்தியாவை சாய்ப்பாங்க.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ள இந்தியாவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா மேற்கொண்டு 2 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பது மற்றொரு பின்னடைவாகும். உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் 5 போட்டிகளிலும் விளையாடினார்.

அந்த 5 போட்டிகளிலும் தனி ஒருவனாக ஆஸ்ரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்ட பும்ரா கடைசி போட்டியில் காயத்தைச் சந்தித்தார். அதிலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாடும் அவர் இங்கிலாந்தில் 5 போட்டிகளில் விளையாடினால் மறுபடியும் காயத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே இங்கிலாந்தில் அவர் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தொடர் துவங்குவதற்கு முன்பே அறிவித்தார்.

- Advertisement -

யார் அறிவிக்க சொன்னா:

அதை ஜஸ்ப்ரித் பும்ராவும் போட்டிக்கு முன்பாக உறுதி செய்தார். இந்நிலையில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பதை யார் முன்னதாகவே பொதுவெளியில் அறிவிக்க சொன்னது என்று கௌதம் கம்பீரை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சாடியுள்ளார். ஏனெனில் இந்த அறிவிப்பை வைத்து இங்கிலாந்து முன்னெச்சரிக்கையாக பிட்ச்சை தயாரித்து இந்தியாவை தோற்கடிக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என்று பும்ரா கூறியுள்ளார். அதை பொதுவெளியில் சொல்வது அவசியமா? என்று நான் நினைக்கிறேன். பிளேயிங் லெவனை கடைசி நேரத்தில் அறிவிப்பது போல் ஏன் அதை நீங்கள் முன்னதாக அறிவிக்காமல் இருந்திருக்கக் கூடாது. நீங்கள் அதை சொல்லாமல் இருந்திருந்தால் எதிரணியினர் இந்நேரம் பும்ரா எத்தனை போட்டியில் விளையாடுவார்? என்று கணித்துக் கொண்டிருப்பார்கள்”

- Advertisement -

பிட்ச் தயாரிப்பாங்க:

“தற்போது ஒரு போட்டியில் விளையாடியுள்ள பும்ரா எஞ்சிய 4 போட்டிகளில் இரண்டில் மட்டுமே விளையாடப் போகிறீர்கள். அடுத்த போட்டியில் விளையாடினால் அதற்கடுத்த 3இல் ஒன்றில் மட்டுமே விளையாடப் போகிறீர்கள். இப்போது இந்தியாவின் பலமான பும்ரா எஞ்சியப் போட்டிகளில் இருக்கப் போவதில்லை என்று தெரிந்து கொண்ட எதிரணியினர் அதற்கு தகுந்தார் போல் பிட்ச்சை தயாரிப்பார்கள்”

இதையும் படிங்க: இரண்டாவது போட்டிக்கு முன்னதாக கழட்டிவிடப்பட்ட ஹர்ஷித் ராணா.. என்ன நடந்தது? – விவரம் இதோ

“அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக தயாராக வேண்டும். வெளிநாட்டில் இந்தியா வெற்றி பெற 2 தூண்கள் இருந்தன. ஒன்று நம்முடைய பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடித்தார்கள். மற்றொன்று ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் சேர்ந்து 20 விக்கெட்டுகளை எடுத்தனர். அது போன்ற நிலைமை தற்போது இல்லை. ஏனெனில் இங்கே ஷமி இல்லை. பும்ரா அளவுக்கு சிராஜ் தரமாக இல்லை” என்று கூறினார்.

Advertisement