- Advertisement -
ஐ.பி.எல்

ஐபிஎல் 2026: சிஎஸ்கே அணியை மினி இந்திய அணின்னே சொல்லலாம்.. பிளேயிங் லெவன் பற்றி ஆகாஷ் சோப்ரா

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கம்பேக் கொடுக்க தயாராகி வருகின்றது. ஏனெனில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள சென்னை கடந்த வருடம் மோசமாக விளையாடி முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. அதனால் தோல்விக்கு காரணமான வீரர்களை கழற்றி விட்ட சென்னை அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது.

அந்த வாய்ப்பில் ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், தேவால்ட் ப்ரேவிஸ் ஆகிய இளம் வீரர்கள் நன்றாக விளையாடி தங்களை நம்பிக்கை நட்சத்திரங்களாக அடையாளப்படுத்தினர். அந்த நிலைமையில் தற்போது 44 வயதாகும் தோனி அடுத்த வருடத்துடன் விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் 2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி பெரும்பாலும் இளம் வீரர்களை வாங்கியது.

- Advertisement -

மினி இந்திய அணி:

இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமலேயே களமிறங்கி அசத்தும் அளவுக்கு சிஎஸ்கே அணி தரமான இந்திய வீரர்களை வாங்கியுள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதனால் மினி இந்திய அணி போல சிஎஸ்கே திகழ்வதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சிஎஸ்கே அணியின் தேர்வு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது”

“ஏனெனில் அவர்களுடைய பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்கும் போது உங்களால் ஒரு இந்திய அணியையே உருவாக்க முடியும் என்பது போல் தெரிகிறது. உங்களுக்கு ஓரிரு வெளிநாட்டுக்கு வீரர்கள் மட்டுமே தேவைப்படுகிறது. நீங்கள் மேத்தியூ ஷார்ட்டை எடுத்துள்ளீர்கள். ஆனால் அவர் டாப் ஆர்டர் என்பதால் பிளேயிங் லெவனில் விளையாட இடமில்லை”

- Advertisement -

2026 சென்னை அணி:

“ஆயுஷ் மாத்ரே, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் ஆகியோர் டாப் ஆர்டரில் விளையாடுவார்கள். அவர்களை தொடர்ந்து தேவால்ட் ப்ரேவிஸ், சிவம் துபே, கார்த்திக் சர்மா ஆகியோர் இருப்பார்கள். அவர்களால் உங்களுடைய டாப் 6 இடங்கள் பூர்த்தியாகி விடும். துபேவுக்குப் பின் அல்லது தோனிக்கு முன் பிரசாந்த் வீர் விளையாடுவார். அந்த வகையில் டாப் 8 வீரர்களில் உங்களுக்கு ஒரே ஒரு வெளிநாட்டு வீரர் மட்டுமே இடம் பெறுகிறார்”

இதையும் படிங்க: இது தோனி டீம் இல்லை அவரோட டீம்.. சிஎஸ்கே இப்படி திடீர்னு மாறும்ன்னு எதிர்பாக்கல.. ஆகாஷ் சோப்ரா

“அதன் பின் 9வது இடத்தில் நூர் அஹ்மத் விளையாடுவார். 10, 11வது இடங்களில் கலீல் அகமது, நாதன் எலிஸ் ஆகியோரை விளையாட வைக்கலாம். அன்சுல் கம்போஜை இம்பேக்ட் வீரராக வைத்துக் கொள்ளலாம். இந்த வகையில் நீங்கள் சிஎஸ்கே அணியில் 3 வெளிநாட்டு வீரர்களை விளையாட வைக்கலாம்” என்று கூறினார்.

- Advertisement -