- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஷமி, கம்பீர் மாற்றி பேசினாலும்.. மஹாபாரத கிருஷ்ணர் மாதிரி இது இந்தியாவுடன் ஃபைனலில் இருக்கு.. ஆகாஷ் சோப்ரா

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் மார்ச் 9ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதில் குரூப் மற்றும் செமி ஃபைனல் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முன்னதாக பாகிஸ்தானில் நடைபெறும் இந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சினைகளால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடி வருகின்றது.

ஆரம்பத்தில் துபாயில் இந்தியா விளையாடும் என்று அறிவிக்கப்பட்ட போது எந்த விமர்சனமும் இல்லை. ஆனால் அங்கே அடுத்தடுத்த வெற்றிகளால் இந்தியா செமி ஃபைனலுக்கு சென்றதும் ஏற்றுக்கொள்ள முடியாத சாதகம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் இந்தியா ஒன்றும் எங்களுடைய சொந்த ஊர் கிடையாது என்று கேப்டன் ரோஹித் சர்மா அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

- Advertisement -

சாதகம் இருக்கோ இல்லையோ:

அதே போல துபாயில் இந்தியாவுக்கு எந்த சாதகமும் இல்லை என்று தெரிவித்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நன்றாக விளையாடினால் தான் வெற்றிக் கிடைக்கும் என்பதை விமர்சர்கள் புரிந்துக்கொண்டு வளர வேண்டும் என்று பதிலடி கொடுத்தார். ஆனால் துபாயில் விளையாடுவது பிட்ச் பற்றி தெரிந்து கொள்ள உதவுவதாக முகமது ஷமி கூறினார். எனவே ஒரே மைதானத்தில் அனைத்து போட்டிகளையும் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமே என்று ஷ்மி தெரிவித்தார்.

இந்நிலையில் விமர்சனங்கள் எதுவாயினும் துபாயில் விளையாடுவது இந்திய அணிக்கு கண்டிப்பாக பிட்ச் பற்றி நன்றாக தெரிந்துக்கொள்ள உதவியுள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அது மகாபாரதத்தில் பாண்டவர்கள் பக்கம் கிருஷ்ணர் இருப்பது போல இந்தியாவுக்கு உதவி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கிருஷ்ணர் இந்தியாவின் பக்கம்:

“துபாயில் விளையாடுவதால் சாதகம் இருப்பதாக ஷமி கூறினார். ஆனால் துபாயில் என்ன சாதகம் இருக்கிறது? விமர்சிக்காமல் வருங்காலத்தை நோக்கி வளருங்கள் என்று கௌதம் கம்பீர் தெரிவித்தார். இதில் யார் சரியான விஷயத்தைச் சொல்கிறார்கள்? சாதகம் இருக்கிறதா? இல்லையா? இதில் 2 விஷயங்கள் இருக்கிறது. ஒன்று நீங்கள் ஒவ்வொரு மைதானத்திற்கும் பயணிக்கும் போது அது சோர்வை உண்டாக்கும்”

இதையும் படிங்க: போட்டிக்கு நடுவே தூங்கிய பாக் வீரருக்கு ஏற்பட்ட பரிதாபம்.. மோசமான சாதனை நிகழ்வு – விவரம் இதோ

“ஆனால் அது வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகிறீர்கள். மற்றொன்று ஒரே இடத்தில் விளையாடுவது பெரிய சாதகம் இல்லை. ஆனால் சூழ்நிலை காரணமாக அதில் கொஞ்சம் சாதகம் இருக்கிறது. அந்த சூழ்நிலைகள் உங்களுக்குப் பொருந்துகிறது. அதற்குத் தகுந்தார் போல் நீங்கள் 11 வீரர்களை தேர்ந்தெடுக்க முடியும். மகாபாரதம் நமக்கு ஒன்று கற்றுக் கொடுத்திருக்கிறது. அதாவது கிருஷ்ணர் உங்கள் பக்கம் இருந்தால் அனைத்தும் முடிந்தது. அணியை சரியாக தேர்ந்தெடுப்பது மட்டுமே மிகவும்” எனக் கூறினார்.

- Advertisement -