
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது. நேற்று முள்ளான்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 214 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 90 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய இந்தியா 19.1 ஓவரில் 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக திலக் வர்மா 62 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ஓட்னல் பார்ட்மேன் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
முன்னதாக அப்போட்டியில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வழக்கம் போல சோதனை என்ற பெயரில் செய்த மாற்றங்கள் இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது. எடுத்துக்காட்டாக லோயர் ஆர்டரில் விளையாடக்கூடிய அக்சர் பட்டேலை அவர் திடீரென 3வது இடத்தில் விளையாட அனுப்பி வைத்தார். அந்த வாய்ப்பில் அக்சர் 21 (21) ரன்கள் எடுத்தது எந்த வகையிலும் வெற்றிக்கு உதவவில்லை.
அதே போல இந்திய அணி பந்து வீசும் போதும் கெளதம் கம்பீர் பெவிலியினில் உட்கார்ந்து கொண்டே சைகைகளால் கேப்டன்ஷிப் செய்தார். எடுத்துக்காட்டாக அதிரடியாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவை கட்டுப்படுத்த வருண் சக்கரவர்த்திக்கு ஒரு ஓவர் கொடு என்று அவர் சூரியகுமாருக்கு சிக்னல் செய்தார். அந்த வகையில் அழுத்தமான சமயங்களில் சூரியகுமாரை டம்மியாக்கிய கௌதம் கம்பீர் இந்திய அணியை மொத்தமாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
அதைப் பார்த்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கால்பந்தாட்டத்தில் மேனேஜர்கள் அணியைக் கட்டுப்படுத்துவது போல கௌதம் கம்பீர் செயல்படுவதாக நேரலையில் விமர்சித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இன்று கௌதம் கம்பீர் மிகவும் பிஸியாக இருக்கிறார். வெளியிலிருந்து அணிக்கு அவர் நிறைய வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறார்”
இதையும் படிங்க: அவரோட ஸ்பெஷல் நாக் தான் இந்திய அணியை இப்படி வீழ்த்த காரணம் – எய்டன் மார்க்ரம் மகிழ்ச்சி
“இந்தப் பக்கம் ஒரு ஓவரை ஸ்பின்னரை போட வையுங்கள் என்று அவர் சிக்னல் கொடுக்கிறார். இது ஃபுட்பால் மேனேஜர் செயல்படுவது போன்ற ஒரு உணர்வை நமக்குக் கொடுக்கிறது” என்று கூறினார். மொத்தத்தில் ஃபுட்பால் மேனேஜர் போல கௌதம் கம்பீர் இந்திய அணியை கட்டுப்படுத்திய போதிலும் வெற்றியைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.