- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜெய்ஸ்வாலை விட அந்த இடத்திற்கு இஷான் கிஷன் தான் பொறுத்தமாக இருப்பார் – ஆகாஷ் சோப்ரா கருத்து

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த ஒருநாள் தொடரானது ஜூன் 13-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது.

விராட் கோலியின் இடத்திற்கு இஷான் கிஷன் சரியானவர் : ஆகாஷ் சோப்ரா

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திர வீரரான விராட் கோலி காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக மற்றொரு அதிரடி துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் விராட் கோலியின் இடத்தில் யார் விளையாடுவார்கள்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா விராட் கோலியின் இடத்தில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவதை விட இஷான் கிஷன் விளையாடுவது தான் சரியாக இருக்கும் என்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இஷான் கிஷன் தற்போது கடவுளின் செல்ல பிள்ளையாக இருக்கிறார். ஏனெனில் அவர் எப்போது தனக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை கட்சிதமாக பிடித்துக் கொண்டு தற்போது இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பி.சி.சி.ஐ ஒப்பந்தத்தில் இல்லாமல் இருந்த அவர் திடீரென சையத் முஷ்டாக் அலி தொடரில் ஜார்கண்ட் அணியை கேப்டனாக வழிநடத்தி வெற்றி பெற்று இந்திய டி20 அணிக்குள் வந்தார். அப்படி இந்திய அணிக்குள் வந்த அவர் டி20 உலக உலகக்கோப்பை தொடரில் முக்கியமான வீரராக விளையாடி சாம்பியன் பட்டம் வென்ற அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவுக்கு பேக்கப் வீரராக இவரை அணியில் சேருங்க – சுரேஷ் ரெய்னா கருத்து

அதேபோன்று கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது ஒருநாள் போட்டியிலும் ரிஷப் பண்டை தாண்டி இடம் பிடித்துள்ளார். அவர் தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருப்பதனால் மூன்றாவது இடத்தில் அவரை களமிறக்கினால் இந்த வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -