ஏமாற்றிய ஆஸ்திரேலியா, நேர்மையை சாகடித்த இங்கிலாந்துக்கு – இந்தியர்கள் வரை கேள்வி, நடந்தது என்ன

Mark Wood Matthew Wade
- Advertisement -

விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையை வெல்வதற்கு உலகின் அனைத்து அணிகளும் இறுதி கட்டமாக தயாராகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க களமிறங்கும் ஆஸ்திரேலியா வலுவான இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 9ஆம் தேதியன்று பெர்த் நகரில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 208/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு 132 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஜோஸ் பட்லர் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 68 (32) ரன்களும் அலெக்ஸ் ஹேல்ஸ் 12 பவுண்டரி 3 சிக்சருடன் 84 (51) ரன்களையும் விளாசி அவுட்டனார்கள்.

இருப்பினும் மிடில் ஆர்டரில் பென் ஸ்டோக்ஸ் 9, ஹரி ப்ரூக் 12, மொய்ன் அலி 10, கிறிஸ் ஓக்ஸ் 13* (5) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக நேதன் எலிஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 209 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேமரூன் கிரீன் 1 ரன்னில் அவுட்டானாலும் அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 36 (26) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா தோல்வி:
அந்த சமயத்தில் கேப்டன் ஆரோன் பின்ச் 12 (7) மார்கஸ் ஸ்டோனிஸ் 35 (15) டிம் டேவிட் 0 (3) என முக்கிய வீரர்கள் சீரான இடைவெளிகளில் அவுட்டான நிலையில் மறுபுறம் போராடிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 8 பவுண்டரி 2 சிக்சருடன் முக்கிய நேரத்தில் 73 (44) ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது போராடிய மேத்யூ வேட் 21 (15) ரன்களில் போராடி அவுட்டானார். அதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 200/9 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலியா 8 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 3 விக்கெட் எடுத்தார். இந்த வெற்றியால் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அந்த அணி அசத்தியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் 17வது ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 22 பந்துகளில் 39 ரன்கள் தேவைப்பட்ட போது 3வது பந்தை எதிர்கொண்ட மேத்தியூ வேட் சிங்கிள் எடுக்க ஓடினார், அப்போது அந்த பந்து பந்தை வீசிய மார்க் வுட் பின்புறத்தில் கேட்ச்சாக மாறியது. அதனால் எதிர்ப்புறம் இருந்த டேவிட் வார்னர் சிங்கிள் எடுக்க மறுப்பு தெரிவித்தார்.

- Advertisement -

அப்போது அந்த பந்தை பார்த்துக் கொண்டே பிடிக்க ஓடி வந்த இங்கிலாந்து வீரர் மார்க் வுட்’டை கேட்ச் பிடிக்க விடாமல் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் வேண்டுமென்றே தடுக்கும் வகையில் ஓடி சென்று டைவ் அடித்து வெள்ளை கோட்டை எட்டினார். அதனால் மார்க் வுட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும் போட்டி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் அடிப்படை விதி முறைப்படி பீல்டிங் செய்யவிடாமல் அந்த இடத்தில் மேத்யூ வேட் தடுத்தது (ஃபீல்டிங் அப்ஸ்ட்ரக்ஷன்) அப்பட்டமாக தெரிந்தும் நடுவரிடம் இங்கிலாந்தினர் புகார் செய்யவில்லை.

அந்த நிலையில் ஏன் புகார் செய்யவில்லை என்று போட்டியின் முடிவில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரிடம் கேட்ட போது நீண்ட வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளதால் அந்நாட்டு ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பாமல் எந்தவித பிரச்சனையுமின்றி இந்த சுற்றுப்பயணத்தை முடிப்பதற்காகவே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று சிரித்துக்கொண்டே வேடிக்கையாகக் கூறினார்.

இந்த இடத்தில் கிரிக்கெட்டின் நேர்மை, நேர்மை என்று பேசும் ஆஸ்திரேலியா ஏமாற்றியதாக இந்திய ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மன்கட் செய்ததற்காக இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவை நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விமர்சித்த இங்கிலாந்தினர் தங்களுக்கு நேர்மைக்குப் புறம்பான நிகழ்வு நடந்தும் அதைக் கேள்வி கேட்காதது ஏன் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். அத்துடன் இந்த விஷயத்தில் இங்கிலாந்து நண்பர்கள் மன்கட் விஷயம் போல் அல்லாமல் அமைதியாக இருப்பார்களா என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement