வரலாற்று டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்பட்ட கைபேசி.! BCCI க்கு ICC எச்சரிக்கை ..!

teamindia
- Advertisement -

கிரிக்கெட்டில் வீரர்கள் செல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்பது ஒரு கடினமான விதி. அவர்கள் போட்டியில் விளையாடும் முன்னரே அவர்கள் பயன்படுத்தும் எந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தையும் அணி ஒப்படைத்து விட வேண்டும். ஆனால், சமீபத்தில் கிரிக்கெட் போட்டியின்போது செல் போன் பயன்படுத்தியதற்காக பி சி சி ஐ நிர்வாகத்தை ஐ சி சி எச்சரித்துள்ளது.

cellphone

கடந்த வியாழக்கிழமை ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான போட்டி பெங்களூரில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் மேலாளர் சுனில் சுப்ரமணியம் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது இந்திய அணியின் உடை மாற்றும் அறையில் செல் போனை பயன்படுடுத்திய வீடியோ ஒன்று வெளியானது. மேலும், அவர் செல்போனை பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அதில் ஏதோ ஒன்றை இந்திய அணியில் விளையாடும் வீரர் ஒருவருக்கும் காண்பித்துக் கொண்டிருக்கிறார். இந்த செயலை ஐ சி சி வன்மையாக கண்டித்துள்ளது.

- Advertisement -

ஐ சி சி யின் விதிப்படி ‘கிரிக்கெட் போட்டியின் போது வீரர்கள் எந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தையும் பயன்படுத்தக் கூடாது. மேலும், வீரர்களின் வசம் தகவல் தொடர்பு சாதனங்களான செல்போன் அல்லது இணைய வசதி உள்ள எந்த ஒரு கருவியும் பயன்படுத்த கூடாது’ என்பது எழுதப்பட்ட விதி. மேலும், கிரிக்கெட் போட்டியில் நடக்கும் ஊழலை தடுக்க 2011 ஆம் ஆண்டு முதல் உடை மாற்றும் அறையிலும் செல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

teamindia

இந்நிலையில் தடையை மீறி இந்திய அணியின் மேலாளர் உடை மாற்றும் அறையில் செல் போனை பயன்படுத்தியதற்காக ஐ சி சி இந்திய கிரிக்கெட் வாரியமான பி சி சி ஐ நிர்வாகத்திற்கு எச்சரிக்கை அளித்துள்ளது. இதற்கு பதிலளித்த பி சி சி ஐ ,அணியின் மேலாளர் உடை மாற்றும் அறையில் செல் போனை பயன்படுத்தலாம்’ என்ற கருத்தை முன்வைத்துள்ளது. இருப்பினும் ஊழல் ஒழிப்பு பிரிவு இந்திய அணியின் மேலாளர் சுனில் சுப்ரமணியத்தை தொடர்பு கொண்டு இந்த செயலை கண்டித்துள்ளது.

Advertisement