மாணவி பதிலால் ஒரு நிமிஷம் ஆடிப்போன சச்சின் – காரணம் இதுதான் ?

- Advertisement -

கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சென்னை அருகிலுள்ள பரனூர் கிராமத்தில் அமைந்திருக்கும் மஹேந்திரா வேர்ல்டு சிட்டியுள்ள பிஎம்டபிள்யூ நிறுவன விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.சென்னை அடுத்துள்ள பரனூரில் அமைந்துள்ளது மஹேந்திரா வேர்ல்டு சிட்டி.இங்கு 50க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
sachin

இந்த மஹேந்திரா வேர்ல்டு சிட்டியில் தான் பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தின் பாகங்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் 11ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தாண்டு முதல் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தொழிற்நுட்ப பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.

- Advertisement -

இதற்கான ஆரம்பகட்ட பயிற்சியை மஹேந்திரா வேர்ல்டு சிட்டியில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தொடங்கியது.நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சச்சின் “பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஸ்கில் நெக்ஸ்ட் போன்ற புதிய முயற்சிகள் இந்தியாவின் தொழில்நுட்பத்தை மேலும் வலுப்படுத்தும் என நான் நம்புகிறேன். இதுபோன்ற நேரடி பயிற்சிதான் இளைஞர்களின் அறிவுத்திறனை அதிகரிக்கும்.
SACHIN

கிரிக்கெட் துறையில் கூட நேரடி பயிற்சிகளே நான் சிறப்பாக விளையாட உதவின. அதுபோல் மாணவர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்கள் தொழில்நுட்பத் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.பின்னர் அங்கிருந்த ஒரு மாணவியிடம் சச்சின் “எவ்வளவோ தொழில் தொடர்பான பிரிவுகள் இருக்கும் போது இந்த கடினமான தொழில்நுட்ப பிரிவைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்ன என்று கேள்வியெழுப்பினார்.

அதற்கு அந்த மாணவி எனக்கு இளம் வயதிலிருந்தே எனக்கு ஆட்டோமொபைல் பிரிவில் அதிக ஆர்வம் இருந்தது. இந்தக்காலத்தில் மகளிருக்கு கடினமான துறை என்றெல்லாம் ஏதுமில்லை. நமக்கு பிடித்த துறையின் மீதான ஈடுபாடு மற்றும் ஆர்வமும் அதனை அடைவதற்கான முயற்சியை எடுத்து கடினமாக உழைத்தாலே போதும் என்று பதிலளித்து சச்சினையே ஆச்சரியப்பட வைத்தார். அவரது பதிலை கேட்டு அசந்த சச்சின் முதலில் இந்த துறையில் நீங்கள் சிறந்து விளங்க உங்களுக்கு வாழ்த்துகள். வருங்கால மகளீர் சந்ததியினருக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்றார்.

Advertisement