இந்திய அணியில் இருக்கும் வீரர்களுக்கு புதிய தொல்லையாக அவதாரமெடுத்துள்ளது ‘யோ யோ ‘ டெஸ்ட். இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்றால் அவர்கள் கண்டிப்பாக இந்த டெஸ்டில் தேர்ச்சியடைய வேண்டும். ஆனால், இந்த யோ யோ டெஸ்டில் வெளிப்படை தன்மை இல்லை என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த யோ யோ டெஸ்டில் முன்னணி வீரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும், முன்கூட்டியே அறிவிக்கப்படாமல் நடத்தப்பட்ட ‘யோ யோ’ டெஸ்ட் நடத்தப்படுகிறது என்றும். இதனால் ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட சஞ்சு சாம்ஸன், அம்பதி ராயுடு, வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறமுடியாமல் என்றும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த யோ யோ பயிற்சயில் அம்பதி ராயுடு தேர்வாகாததால் இதுகுறித்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்க செயலாளர் ஷ்ரேயாஸ் நாராயண், தெரிவிக்கையில்,’ ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் ஓராண்டு முழுவதும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்த வீரர், உடற்தகுதி இல்லாமல் எப்படி ஆடியிருக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் கூட இந்த யோ யோ டெஸ்ட் பின்பற்றபட்டு வந்தது ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் அவர்கள் இந்த டெஸ்டை கைவிடுத்து வீரராகளுக்கு வேறு விதமான பயிற்சிகளை அளித்து வருகின்றனர் என்றும் ஒரு சில தரப்பினர் குறி வருகின்றனர்..இதனால் யோ யோ டெஸ்டிற்கு எதிரான பல எதிர்ப்புகள் கிளம்ப தொடங்கியுள்ளது.



