இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கு கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. தற்போதைய கிரிக்கெட்டின் அதிசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி கேப்டன் பணியையும் திறம்பட செய்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் இந்திய பல முக்கிய தொடர்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்து இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பிரபல ஷாம்பூ கம்பனிக்காக நடித்த விளம்பரத்தில் முதலில் அறிமுகமாகி பிறகு அந்த நட்பு படிப்படியாக வளர்ந்து காதலாகி திருமணமும் செய்துக்கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் இந்த ஜோடி காதல் ஜோடி போன்றே உலகம் முழுவதும் சுற்றி வருகின்றனர். கோலி மற்றும் அனுஷ்கா சேர்ந்து சில விளம்பரங்களில் இதற்கு முன்னர் நடித்திருந்தனர், தற்போது இவர்கள் இருவரும் நடித்துள்ள புதிய விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :
Was a joy shooting for this, #PureFun!
Check out the new Shyam Steel ad for their TMT bars made from #PureSteel.@AnushkaSharma @shyamsteel#PureLove #ShyamSteel #TMT pic.twitter.com/f9K9X7jhy3— Virat Kohli (@imVkohli) March 20, 2019
ஷ்யாம் ஸ்டீல் என்ற இரும்பு கம்பி நிறுவனத்துக்காக எடுக்கப்பட்ட இந்த விளம்பரத்தினை விராட் கோலி தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை ரசிகர்கள் தற்போது இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.