விராட் கோலி, தோனி மீது மீண்டும் வன்மத்தை காட்டிய கெளதம் கம்பீர் – இந்திய ரசிகர்களையும் சாடல், பேசியது என்ன

Gambhir
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 15 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2வது சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வி, கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறிய போன்ற பின்னடைவுகள் இருந்தாலும் நிறைய உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ள இந்தியா குறைகளை நிறையாக்கி இத்தொடரில் கோப்பையை வெல்ல தயாராகியுள்ளது.

அந்த வகையில் விராட் கோலி, ரோகித், சூர்யகுமார், பாண்டியா போன்ற நட்சத்திரங்கள் நிறைந்த இந்திய அணியில் அபாரமாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. பொதுவாக இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகை கொண்ட சுதந்திர நாட்டில் இருக்கும் ரசிகர்கள் 11 வீரர்கள் விளையாடினாலும் தங்களுக்கு பிடித்த வீரர்களை தலையில் வைத்துக் கொண்டாடுவதை காலம் காலமாக வழக்கமாக வைத்துள்ளனர்.

- Advertisement -

வன்மம் தெரியுது:
அதிலும் குறிப்பாக தற்போதைய நவீன கிரிக்கெட்டில் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை அதிகப்படியாக பின்பற்றும் ரசிகர்கள் இந்தியா வெற்றி பெறும் போது தங்களுடைய அபிமான நட்சத்திரங்கள் தான் வெற்றிக்கு காரணமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் கொண்டாடுகிறார்கள். ஆனால் 11 வீரர்கள் இணைந்து வெற்றியை பெற்றுக் கொடுக்கும் போது அதை இந்தியா பெற்றதாகக் கொண்டாடாமல் தனிநபர்கள் வாங்கிக் கொடுத்ததாக ரசிகர்கள் கொண்டாடுவது வருத்தமளிப்பதாக முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் சாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நிறைய விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி இந்த உலக கோப்பையிலும் அசத்துவாரா என்ற கேள்வியை பிரபல தொலைக்காட்சியில் கம்பீரிடம் தொகுப்பாளர் கேட்டார்.

அப்போது அவரை விட நல்ல பார்மில் இருக்கும் சூரியகுமார் அல்லது அக்சர் படேல் போன்றவர்களை விட்டுவிட்டு விராட் கோலியுடன் பேட்டியை துவங்குவது ஏன் என்ற வகையில் தொகுப்பாளரை சாடிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “முதலில் உலக கிரிக்கெட்டில் தனிநபரால் வெல்ல முடியாது என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தேசத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வீரர்களும் முக்கியமானவர்கள். ஆனால் இங்கே ஒரு சிலரை மட்டும் பெரியவர்களாக பார்கிறார்கள். இங்கே விராட் கோலி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அக்சர் பட்டேல் முக்கியமாவார், அதேபோல் ராகுல் முக்கியமானவர். மேலும் விராட் கோலி அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தனி நபர்களாக உலக கோப்பையை வெல்ல முடியாது. அதனால் உங்களுடைய அனைவரது கண்ணோட்டமும் தவறானது”

- Advertisement -

“மேலும் விராட் கோலி, ரோஹித் ஆகியோர் 500 ரன்கள் குவிக்கலாம். ஆனால் விக்கெட்டுகளை பவுலர்கள் தான் எடுக்க வேண்டும். அதனால் விராட் கோலி போன்றவருக்கு கிடைக்கும் முக்கியத்துவம் 15 பேருக்கும் கிடைக்க வேண்டும். ஏனெனில் அனைவருமே பீல்டிங், கேட்ச் உட்பட அனைத்து வேலைகளிலும் செய்கின்றனர்” என்று கூறினார். அப்போது இந்தியாவில் குறிப்பிட்ட வீரர்களை ஹீரோக்களாக ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம் தானே என்று தொகுப்பாளினி கேட்டார்.

அதனால் மேலும் கோபமடைந்த கம்பீர். “முதலில் இந்தியாவில் இந்திய கிரிக்கெட் மட்டும் கொண்டாடப்பட வேண்டும், தனிநபர்களை ஹீரோக்களாக கொண்டாடுவது நிறுத்தப்பட வேண்டும். இதை மீடியாக்கள் தான் உருவாக்குகின்றனர். தற்சமயத்தில் விராட் கோலி, ரோகித் ஆகியோரை விட இந்திய பேட்ஸ்மேன்களில் சூரியகுமார் தான் நல்ல பார்மில் இருக்கிறார் ஆனால் இதுவரை நீங்கள் என்னிடம் அவரைப் பற்றி ஒரு கேள்விகூட கேட்கவில்லை. இங்கே சூரிய குமாருக்கு சமூக வலைத்தளத்தில் குறைவான ஃபாலோயர்கள் உள்ளதே காரணமாகும். அதனால் நீங்கள் சூர்யகுமார் யாதவ் பெயரை சொல்லவே இல்லை. தற்சமயத்தில் செயல்பாடுகள் அடிப்படையில் பார்க்கும்போது ரோகித், ராகுல் ஆகியோரை விட சூர்யா தான் முதலிடத்தில் உள்ளார்”

“துரதிர்ஷ்டவசமாக இந்த உலகக் கோப்பையை இந்தியா வென்றால் அனைத்து பெயரும் ரோகித் சர்மாவுக்கு சென்றுவிடும். ஆனால் கோப்பையை ரோகித் சர்மா வெல்லவில்லை இந்தியா வென்றது. இதேபோல் 2007, 2011இல் நாம் கோப்பையை வென்றபோது தோனி வென்றதாக அனைவரும் சொன்னார்கள். 1983இல் வென்றபோது கபில் தேவ் வென்றதாகச் சொன்னார்கள். ஆனால் உண்மையில் இந்தியா தான் வென்றது. எனவே இந்தியாவில் இப்படி தனிநபர்களை ஹீரோக்களாக கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.

Advertisement