அரஷ்தீப் சிங்கை நேரடியாக திட்டிய பாக் நபரை வெளுத்து வாங்கிய பிரபல பத்திரிகையாளர் – ரசிகர்கள் பாராட்டு

Vimal Kumar
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து நல்ல தொடக்கத்தை பெற்றாலும் சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா தற்போது பைனலுக்கு கூட செல்ல முடியாமல் வீட்டுக்கு கிளம்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தீபக் சஹர் போன்ற தேவையான வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்யாதது, தேர்வு செய்த தினேஷ் கார்த்திக்க்கு நம்பி வாய்ப்பு வழங்காதது, தீபக் ஹூடாவை சரியாக பயன்படுத்தாதது போன்ற கேப்டன் ரோகித் மற்றும் அணி நிர்வாகத்தின் குளறுபடியான முடிவுகள் இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த தொடரில் சூப்பர் 4 சுற்றில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா கடைசி ஓவர் வரை போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதில் 18வது ஓவரில் 0 ரன்களில் இருந்தபோது பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி கொடுத்த கேட்சை இளம் இந்திய வீரர் அர்ஷிதீப் சிங் தவற விட்டது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் அவர் மட்டுமே மொத்த தோல்விக்கும் காரணமென்று சொல்ல முடியாது. ஏனெனில் அதன்பின் கடைசி 2 ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்ட போது 19வது ஓவரை வீசிய சீனியர் புவனேஸ்வர் குமார் அனுபவத்தை காட்டாமல் 19 ரன்களை வாரி வழங்கி வெற்றியை தாரை வார்த்தார்.

- Advertisement -

கடுமையான விமர்சனங்கள்:
அதனால் கடைசி ஓவரில் 7 ரன்களை மட்டும் கட்டுப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைமையில் பந்துவீசிய அர்ஷிதீப் சிங் 5வது பந்து வரை போட்டியை இழுத்து வந்து மொத்தமாக 3.5 ஓவரில் 1 விக்கெட் உட்பட 27 ரன்களை மட்டும் கொடுத்து வெற்றிக்காக முடிந்தளவு போராடினார். அதுபோக அப்போட்டியில் விராட் கோலி தவிர ரோகித் சர்மா உள்ளிட்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பியது தோல்வியை பரிசளித்தது. ஆனால் அந்த கேட்ச் தான் தோல்விக்கு காரணமென்று மொத்த பழியையும் அர்ஷிதீப் மீது போட்ட பெரும்பாலான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தார்கள்.

அதிலும் எல்லை மீறிய சில பாகிஸ்தான் ரசிகர்கள் கெட்ட வார்த்தைகளாலும் சொற்களாலும் அவரை திட்டி தீர்த்தார்கள். அதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அணி நிர்வாகமும் உண்மையான ரசிகர்களும் சச்சின் டென்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட ஏராளமான முன்னாள் இன்னாள் வீரர்களும் அரஷ்தீப் சிங்க்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்தனர். அந்த நிலைமையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விட்டு ஹோட்டல் திரும்புவதற்காக மைதானத்திலிருந்து பேருந்துக்கு வந்த அரஷ்தீப் சிங்கை திட்டுவதற்காகவே காத்திருந்த ஒரு பாகிஸ்தான் நபர் “இதோ வரார் பாருங்க சர்தார் ஜி, இவர்தான் கேட்ச் கோட்டை விட்டு மேட்ச்சையும் கோட்டை விட்டவர்” என்ற வகையில் கிண்டலடித்து திட்டும் வகையில் பேசினார்.

- Advertisement -

அதனால் கோபமடைந்த அர்ஷிதீப் சிங் பேருந்தின் படிக்கட்டில் ஏறி நின்றவாறு அவரை முறைத்து பார்த்தார். அதற்கு “உங்களை போட்டோ எடுக்கிறேன் வேறு ஒன்றுமில்லை” என்று கூறி அந்த நபர் சமாளித்தார். அதன் பின் அர்ஷிதீப் சிங் பேருந்துக்கு உள்ளே சென்று அமர்ந்து விட்டார் என்றாலும் அதே இடத்தில் இருந்த பிரபல இந்திய பத்திரிகையாளர் விமல் குமார் ஆத்திரமடைந்து அந்த நபரை சரமாரியாக வெளுத்து வாங்கினார்.

“நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள், நீங்கள் யார், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்” என்று கோபமாக கேள்வி எழுப்பிய அவர் அருகில் நின்று கொண்டிருந்த பாதுகாவலர்களிடம் “இவர் அர்ஷிதீப் சிங்கை திட்டுகிறார்” என்று புகார் அளித்தார். அத்துடன் “நீங்கள் எவ்வாறு அப்படி சொல்லலாம், அவர் யார் என்று தெரியுமா, இந்தியாவினுடைய வீரர்” என்று கடுமையான கோபத்துடன் அந்த நபருக்கு பதிலடி கொடுத்தார்.

அதனால் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் பாதுகாவலர்கள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்ற முயற்சித்தனர். அதனால் தப்பிய அந்த நபரை பாதுகாவலர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் விமல் குமார் கண்ணத்திலேயே அறைந்திருப்பார். அந்தளவுக்கு கடுமையான கோபத்துடன் நடந்து கொண்ட அவர் இளம் இந்திய வீரருக்கு ஆதரவாக பேசியதற்கு நிறைய இந்திய ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

Advertisement