உண்மையான அதிரடி பாதையில் பயணிக்க ரோஹித் – டிராவிட் கூட்டணி நிகழ்த்த வேண்டிய 4 மாற்றங்கள்

Dravid
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை வெல்வதற்காக கடந்த முறை விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் படுதோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் முழுவீச்சில் தயாராகி வருகிறது. கடந்த உலகக் கோப்பைக்கு பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் பங்கேற்ற அத்தனை தொடர்களிலும் தோல்வியே அடையாமல் இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது.

India Rohit Sharma

- Advertisement -

அவரும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இணைந்து எந்த சூழ்நிலையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் அதற்காக பின் வாங்காமல் களமிறங்கும் அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை ஆழமாக விதைத்துள்ளதே அந்த தொடர் வெற்றிகளுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அப்படி சத்தமின்றி அதிரடி பாதையில் பயணித்தாலும் சில அம்சங்கள் இன்னுமே இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதால் அதில் முன்னேற தகுந்த காரணிகளைப் பற்றி பார்ப்போம்:

4. பரமான ராகுல்: 2019க்குப்பின் ரோகித், விராட் கோலி ஆகியோரை மிஞ்சும் அளவுக்கு இந்தியாவின் லேட்டஸ்ட் ரன் மெஷினாக அவதரித்த இவர் அதிரடியாகவும் அழகாகவும் பேட்டிங் செய்து புதிய நம்பிக்கை நட்சத்திரமாக அவதரித்தார். ஆனால் நாளடைவில் தனது இடத்தையும் மார்க்கெட்டையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாட துவங்கியுள்ளார்.

KL Rahul

வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் 2020க்குப்பின் இதுவரை அவர் களமிறங்கிய 24 போட்டிகளில் 2இல் மட்டுமே 150க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் அடித்துள்ளார். அந்த 2 போட்டிகளும் நமீபியா போன்ற கத்துக்குட்டி எதிரானதாகும். அதன் உச்சகட்டமாக சமீபத்தில் ஹாங்காங் போன்ற பலவீனமான அணிக்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்ததை கூறலாம்.

- Advertisement -

ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவோ 50 பந்துகளில் 60 ரன்கள் வேண்டாம் 25 பந்துகளில் 50 ரன்கள் வேண்டும் என்ற கோட்பாட்டை கொண்டுள்ளார். எனவே அவரது அதிரடி அணுகுமுறையில் உண்மையான வெற்றி காண்பதற்கு ஒன்று ராகுலுக்கு அழுத்தத்தைக் கொடுத்து அதிரடியாக விளையாட உத்தரவிட வேண்டும் அல்லது தொடக்க வீரரை மாற்ற வேண்டும்.

Rohit Sharma Six

3. ரோஹித்தும்: டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி பெரிய ஸ்கோர் அடிப்பதற்கு பவர்பிளே ஓவர்களில் களமிறங்கும் தொடக்க வீரர்கள் அதிரடியாக ரன்களை குவிப்பது அவசியமாகும். அந்த வகையில் 25 பந்துகளில் 50 ரன்கள் தேவை என்ற கோட்பாட்டைக் கொண்ட ரோகித் சர்மா பெரும்பாலான போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் விளாசினாலும் அந்த நல்ல தொடக்கத்தை பெரிய ரன்களாக மாற்றாமல் அவுட்டாகி விடுகிறார்.

- Advertisement -

2020க்குப்பின் 15 இன்னிங்ஸ்சில் ஒருமுறை மட்டுமே அரை சதமடித்துள்ள அவர் 2 முறை 40+ ரன்கள் எடுத்துள்ளார். பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி பெரிய ரன்கள் எடுப்பது சிரமம் என்றாலும் அதே சூழ்நிலையில் மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் ஜோஸ் பட்லர், குயின்டன் டி காக் போன்ற வெளிநாட்டு தொடக்க வீரர்கள் அதிரடியாக ரன்களையும் எடுத்துள்ளனர். எனவே தனது கோட்பாட்டில் வெற்றி காண்பதற்கு முதலில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவதுடன் பெரிய ரன்களை எடுப்பதும் அவசியமாகிறது.

shaheen afridi

3. ஸ்விங் ஸ்டோரி: இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் துறையில் இருக்கும் ரோகித், ராகுல், விராட் போன்றவர்கள் பலமானவர்கள் என்றாலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களின் புதிய ஸ்விங் பந்துகளில் பெட்டிப்பாம்பாக அடங்குபவர்களாக உள்ளனர். கடந்த 2017, 2021 ஆகிய உலகக்கோப்பைகளில் அந்தப் பலவீனத்தை உலகிற்கு அம்பலப்படுத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ரசிகர்கள் நன்றி தெரிவித்தாக வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் அதிரடியாக விளையாடி வெற்றி காண வேண்டும் என்று முயற்சிக்கும் ரோகித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதற்காக லீக் சுற்றில் கடினமாக உழைத்து நாக் – அவுட் போன்ற முக்கிய போட்டியில் இந்த வலையில் மீண்டும் விழுந்தால் அத்தனை உழைப்பும் வீணாகிவிடும். சமீபத்திய இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ரீஸ் டாப்லியிடம் ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் மீண்டும் அந்த வலையில் விழுந்ததிலிருந்து இந்திய டாப் ஆர்டர் இன்னும் அந்த பலவீனத்தை பலமாக மாற்றவில்லை என்பதால் அதில் மெனக்கட வேண்டியது அவசியமாகியுள்ளது.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

1. ஆழமான பேட்டிங்: அனைத்துப் போட்டிகளிலும் டாப் ஆர்டர் காப்பாற்ற முடியாது என்பதால் டி20 கிரிக்கெட்டில் சரிவை சமாளித்து வெற்றி காண்பதற்கு ஆழமான பேட்டிங் வரிசை முக்கியமாகிறது. அதிலும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து போன்ற அணிகளில் 8, 9வது இடத்தில் களமிறங்குபவர் கூட கணிசமான ரன்களை அதிரடியாக எடுப்பவர்களாக இருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போதைய அணியில் ஹர்திக் பாண்டியா மீண்டும் வந்துள்ளது பேட்டிங் வரிசையை ஆழப்படுத்த உதவியுள்ளது என்றாலும் 8, 9 ஆகிய இடங்களில் உள்ளவர்கள் ரன்களை அடிக்கும் திறமை இல்லாதவர்களாக இருக்கின்றனர். எனவே தீபக் ஹூடா, தீபக் சாஹர், அக்சர் பட்டேல் போன்றவர்களுக்கு வாய்ப்பளித்து அந்த பின்னடைவை இந்தியா சரிசெய்யலாம்.

Advertisement