மைதானத்தில் பொறுமையிழந்து ரோஹித் சர்மா கோபப்பட்ட 5 தருணங்கள் – விவரம் இதோ

Rohith-5
- Advertisement -

கிரிக்கெட் களத்தில் விளையாடும் எந்த வீரராக இருந்தாலும் பல்வேறு தருணங்களில் அதில் ஏற்படும் அழுத்தமான சூழ்நிலைகளுக்கு பதற்றமடையாமல் இருப்பதும் வெற்றியை பெற்றுக் கொடுக்கும் ஒரு அம்சமாகும். அதிலும் குறிப்பாக கேப்டனாக இருப்பவர் போட்டியில் தோல்வியே சந்தித்தாலும் அதற்காக பதற்றமடையாமல் இருந்தால் தான் அவரைப் பார்த்து அணியில் விளையாடும் எஞ்சிய வீரர்களும் பதறாமல் இருப்பார்கள். மேலும் நிறைய சமயங்களில் ஆஸ்திரேலியா போன்ற எதிரணியினர் வேண்டுமென்றே கவனத்தை சீர்குலைப்பதற்கு ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் வம்பிழுத்து தோற்கடித்து விடுவார்கள்.

எனவே அவை அனைத்திற்கும் வளைந்து கொடுக்காமல் பொறுமையாக இருப்பது அவசியமான ஒன்றாகும். ஆனால் கிரிக்கெட் வீரர்களும் மனிதர்கள் தானே என்ற வகையில் நிறைய தருணங்களில் பெரும்பாலான கோபமடைந்து விடுவார்கள். இருப்பினும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி போன்ற ஒரு சிலர் மட்டுமே எந்தவித சூழ்நிலையாக இருந்தாலும் ஒரே மாதிரி கூலாக கையாள்வார்கள்.

- Advertisement -

மறுபுறம் விராட் கோலி போன்றவர்கள் சிறுசிறு விஷயங்களுக்கே எரிமலையாக வெடிப்பார்கள். ஆனால் கூல் கேப்டன் என்றழைக்கப்படும் தோனியே சில தருணங்களில் கோபமடைந்த எரிமலையாக பொங்குவதையும் பார்த்துள்ளோம். அவரைப்போலவே இந்தியாவின் தற்போதைய கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவும் பெரும்பாலான சமயங்களில் எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் கூலாக காட்சியளிப்பவராகவே இருந்து வருகிறார்.

பொங்கிய தருணங்கள்:
இருப்பினும் அவரும் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதன் அடிப்படையில் ஒருசில சமயங்களில் கோபமடைந்து கெட்ட வார்த்தைகளை பிரயோகித்த தருணங்களும் உள்ளது. அந்த தொகுப்பு பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. ஸ்மித்துடன் மோதல்: கடந்த 2014 பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அடிலைடில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வலுவாக விளையாடிக் கொண்டிருந்தது. அப்போட்டியில் முதல் இன்னிங்சில் சதமடித்த ஸ்டீவ் ஸ்மித் 2-வது இன்னிங்சில் பெரிய ரன்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது கேப்டன் விராட் கோலி பகுதிநேர பந்து வீச்சாளராக ரோகித் சர்மாவை பந்துவீச வைத்தார்.

அதில் ஒரு பந்து ஸ்மித்தை திணறடித்ததால் ரோகித் எல்பிடபிள்யூ கேட்டார். அதற்கு அம்பயர் அவுட் வழங்காத நிலையில் அது உறுதியாக அவுட் தான் என்று நம்பிய ரோகித் சர்மா ஒருசில வினாடிகள் அப்படியே நின்று நடுவரை பார்த்து அவுட்டில்லையா என்று கேட்டுக் கொண்டிருந்தார். மறுபுறம் கடுப்பான ஸ்டீவ் ஸ்மித் ஒரு சில வார்த்தைகளை ரோஹித் சர்மாவிடம் உபயோகித்தார்.

- Advertisement -

அதனால் கோபமடைந்த அவர் “என்ன, என்ன” என சத்தமாக பதிலுக்கு கேட்டார். அதை பார்த்த கேப்டன் விராட் கோலி உடனடியாக எரிமலையாக வந்து வம்பிழுக்க முயன்ற ஸ்டீவ் ஸ்மித்துக்கு தக்க பதிலடி கொடுத்தார். அப்போது ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் நடுவர்கள் ஆகியோர் உள்ளே புகுந்து அனைவரையும் சமாதானப்படுத்தினார்கள்.

4. வார்னருடன் மோதல்: கடந்த 2015இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் சிங்கிள் எடுக்க முயன்ற ரோகித் சர்மாவை தடுத்து நிறுத்தும் வகையில் பீல்டிங் செய்த டேவிட் வார்னர் பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்தார். அது அவரின் கால்களில் பட்டதால் கீப்பரால் பிடிக்க முடியாமல் போனது. அதை பயன்படுத்திய ரோகித் சர்மாவும் சுரேஷ் ரெய்னாவும் ஒரு ரன் எடுத்தனர்.

- Advertisement -

அதனால் கடுப்பான டேவிட் வர்னர் பந்து எறியும் போது குறுக்கே எதற்காக வந்தீர்கள் என்ற வகையில் வம்பிழுக்க தொடங்கினார். அதனால் கோபமடைந்த ரோகித் சர்மா இந்தியில் பேசினார். அதற்கு டேவிட் வார்னர் ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக் கொண்டதால் இருவருக்கும் சண்டை வெடித்த நிலையில் வழக்கம் போல இதர வீரர்களும் நடுவர்களும் உள்ளே புகுந்து சமாதானப் படுத்தினார். இருப்பினும் அந்த சமயத்தில் டேவிட் வார்னர் மீது தவறு இருந்ததால் அந்த போட்டியின் முடிவில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

3. சஹாலுக்கு மிரட்டல்: கடந்த பிப்ரவரியில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 237 ரன்களை கட்டுப்படுத்த பந்துவீசிய இந்தியா கடைசி 6 ஓவரில் 48 ரன்களை கட்டுப்படுத்த நேரிட்டது. எதிரணியிடம் 2 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருந்த நிலையில் அந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய வீரர் சஹால் சோம்பேறித்தனமாக பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

அதனால் கோபமடைந்த கேப்டன் ரோகித் சர்மா “உனக்கு என்ன ஆயிற்று, ஏன் ஒழுங்காக பில்டிங் செய்வதில்லை, ஓடு அங்கே” என்று காரசாரமாக தெரிவித்தார். அது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது ரசிகர்களிடையே வைரலானது.

2. புவியிடம் கோபம்: அதேபோல் கடந்த பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த டி20 தொடரின் போது சீனியர் இந்திய பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ரன் அவுட் செய்யும் போது அந்த பந்தை ஸ்டம்புக்கு பின்னாடி நின்று பிடிக்க தவறி விட்டார் என்பதற்காக கோபமடைந்த ரோகித் சர்மா பந்தை அவரது முகத்தில் படும் அளவுக்கு எட்டி உதைத்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

1. புஜாராவிடம் கெட்ட வார்த்தை: கடந்த 2019இல் சொந்த மண்ணில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி 176 ரன்களை விளாசிய ரோகித் சர்மா 2-வது இன்னிங்சில் புஜாராவுடன் இணைந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது வேகமாக ஒரு சிங்கிள் எடுக்க முயற்சித்தார்.

ஆனால் பொதுவாகவே மெதுவாக ஓடக்கூடிய புஜாரா ரன் அவுட் செய்யும் வகையில் மெதுவாக ஓடி வந்ததால் பொறுமையிழந்த ரோகித் சர்மா இந்தியில் மிகவும் பிரபலமான கெட்ட வார்த்தையை பயன்படுத்தி திட்டியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அதனால் அந்த சமயத்தில் அந்த தருணம் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Advertisement