இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது செயின்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் துவங்கியது. வீரர்கள் முன்கூட்டியே மைதானத்திற்கு வந்தும் இரு அணிகளை சேர்ந்த வீரர்களின் உபகரணம் அனைத்தும் தாமதமாக மைதானத்திற்கு வந்ததால் போட்டி கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தாமதத்திற்கு பிறகு தொடங்கியது.
அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் காரணமாக தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் செய்துள்ளது.

அதன்படி கேப்டன் ரோஹித் சர்மா கடந்த போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாயை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக ஆவேஷ் கானை அணியில் இணைத்துள்ளார். அவரை தவிர்த்து இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
பெரும் விமர்சனத்திற்கு மத்தியில் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்த இரண்டாவது டி20 போட்டியில் தனது வாய்ப்பை தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : தோனி என் தோளில் தட்டிக்கொடுத்து சொன்ன அந்த வார்த்தை என்னை ஊக்கப்படுத்தியது – முகேஷ் சவுத்ரி பேட்டி
1) ரோஹித் சர்மா, 2) சூரியகுமார் யாதவ், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) ரிஷப் பண்ட், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) ரவீந்திர ஜடேஜா, 8) அஷ்வின், 9) புவனேஷ்வர் குமார், 10) ஆவேஷ் கான், 11) அர்ஷ்தீப் சிங்



