சி.எஸ்.கே நிர்வாகம் வெளியிட்ட இந்த வீடியோவால நிச்சயமா – ரசிகர்கள் சந்தோஷப்பட்டிருப்பாங்க

Dhoni and Raina
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியை இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கங்குலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் மைதானத்தில் நேரில் கண்டு களித்தனர். மேலும் மைதானத்தில் அவர்கள் கொடுத்த ஆதரவு ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியும், சின்ன தலை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் மைதானத்திற்குள் இருந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

அதோடு அவர்களுடன் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் உடன் இருந்தார். இப்படி பெரும்பாலான நட்சத்திர முன்னாள் வீரர்கள் நேரில் வந்து இந்த போட்டியை ரசித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றது.

- Advertisement -

ஆனாலும் பெரிய பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியானது இங்கிலாந்து அணி நிர்ணயத்தை 247 ரன்களை துரத்த முடியாமல் 146 ரன்கள் மட்டுமே குவித்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் மைதானத்தில் தல தோனியையும், சின்ன தல சுரேஷ் ரெய்னாவையும் ஒரே இடத்தில் ரசிகர்கள் கண்டது மிக மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. அதுமட்டும் இன்றி தற்போது இதற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் சிஎஸ்கே அணியானது ஒரு வீடியோவை தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதில் தல தோனியும், சின்ன தல ரெய்னாவும் ஒரே காரில் பயணிக்கும் சில தருணங்களை பதிவிட்டு #The Reunion of Brothers” என அந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. அவர்கள் பகிர்ந்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement