அடுத்த வருடம் கண்டிப்பாக ஆர்சிபி’க்கு வருவேன். எதற்கு தெரியுமா? – ஏபி டீ வில்லியர்ஸ் கூறியது இதோ

ABD
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக ரசிகர்களை மகிழ்வித்து 70 போட்டிகள் கொண்ட தொடரை கடந்து நாக் – அவுட் சுற்றை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு தேவையான வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் மோதுகின்றன. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்தி கடந்த வருடம் வரை சென்னை அணியில் அற்புதமாக செயல்பட்ட டு பிளேஸிஸ் தலைமையில் முதல் முறையாக புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் கோப்பையை வென்ற தீர வேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகிறது.

RCB Faf Virat

- Advertisement -

கடந்த பல வருடங்களாக அனில் கும்ப்ளே முதல் விராட் கோலி வரை எவ்வளவோ போராடியும் பைனல் வரை நெருங்கியும் கோப்பையை முத்தமிட முடியாத அந்த அணி இம்முறை முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் முக்கியமான தருணங்களில் அதிர்ஷ்டம் கை கொடுக்காததால் வெறுங்கையுடன் திரும்பிய அந்த அணிக்கு இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கே மிகப்பெரிய அதிர்ஷ்டமாக டெல்லி தோற்கடித்த மும்பை மாபெரும் உதவி செய்தது.

டீ வில்லியர்ஸ்:
மேலும் அந்த அணிக்காக கடந்த பல வருடங்களாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர ஜாம்பவான் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் இல்லாமல் அந்த அணி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த வருடம் ஓய்வு பெற்றதால் வரலாற்றில் முதல் முறையாக அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. 2008 – 2010 வரை டெல்லிக்காக விளையாடிய அவர் அதன்பின் பெங்களூருவுக்காக கடந்த 11 வருடங்களாக தனது அபாரமான பேட்டிங்கால் தோல்வியடைய வேண்டிய பல போட்டிகளில் சொல்லி அடித்த கில்லியாக பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர்.

ABD

உலகின் எப்பேர்பட்ட தரமான பவுலர் எவ்வளவு கடினமாக வீசினாலும் மைதானத்தின் நாலா புறங்களிலும் சிக்ஸர்களாக பறக்கவிடும் திறமை பெற்ற அவரை ரசிகர்கள் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மென் என கொண்டாடுகின்றனர். அதிலும் சுழன்றும் படுத்துக்கொண்டும் புது புது ஷாட்களை அறிமுகப்படுத்தி கிரிக்கெட்டை புதிய பரிணாமத்திற்கு எடுத்துச் சென்ற அவர் இம்முறை விளையாடுவது பெங்களூர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. களத்தில் சூப்பர் மேனை போல கேட்ச் பிடிப்பதில் வல்லவரான அவருக்கு இந்தியாவில் குறிப்பாக பெங்களூருவில் விராட் கோலிக்கு ஈடாக ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.

- Advertisement -

அந்த அளவுக்கு அங்குள்ள ரசிகர்கள் மற்றும் மக்களில் ஒருவராக கருதப்படும் அவர் இம்முறை முதல் முறையாக ஐபிஎல் தொடரின்போது பெங்களூருவை விட்டு பிரிந்து இருந்தாலும் அந்த அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் ஒன்று விடாமல் பார்த்து சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்.

2023இல் ஏபிடி:
இந்நிலையில் வரும் காலங்களில் ஏபி டிவில்லியர்ஸ் பெங்களூரு அணியுடன் பயிற்சியாளர் குழு போன்ற ஏதேனும் ஒரு அங்கமாக இருப்பார் என்று அதன் நட்சத்திரம் விராட் கோலி சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதை அவரே தற்போது உறுதி செய்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.”விராட் அதை உறுதி செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் அதை பற்றி இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. ஆனாலும் அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் கண்டிப்பாக நானும் இருப்பேன்.

- Advertisement -

ஏனெனில் எந்த அளவுக்கு மிஸ் செய்கிறேன் என்று கூறமுடியாது அதை ரொம்பவே மிஸ் செய்கிறேன். மேலும் பெங்களூருவில் அடுத்த வருடம் குறிப்பிட்ட சில போட்டிகள் நடைபெற உள்ளதாக கேள்விப்பட்டேன். எனவே என்னுடைய 2-வது வீடான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் நிரம்பியிருக்கும் தருணத்தை பார்ப்பதற்காக மீண்டும் வருவேன். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

abd 1

தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து பெங்களூரு தான் தனது 2-வது வீடு என்று தெரிவித்துள்ள ஏபி டிவிலியர்ஸ் அடுத்த வருடம் அங்குள்ள ரசிகர்களை பார்ப்பதற்காகவே நிச்சயம் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 2011 – 2021 வரை 157 போட்டிகளில் 4522 ரன்களை பெங்களூருவுக்காக குவித்துள்ள அவர் வரலாற்றில் அந்த அணிக்காக அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : 2 – 3 மேட்ச்ல சொதப்புனா உடனே நீக்கீடுவாரு, முன்னாள் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பற்றி முன்னாள் வீரர் விமர்சனம்

அப்படிப்பட்ட அவருக்கும் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த மற்றொரு ஜாம்பவான் கிறிஸ் கெயிலுக்கும் தங்களுக்கு ஆற்றிய பங்கை கௌரவப்படுத்தும் வகையில் இதர ஐபிஎல் அணிகளுக்கு முன்னோடியாக வரலாற்றில் முதல் முறையாக “ஆர்சிபி ஹால் ஆஃப் ஃபேம்” என்ற கௌரவத்தை பெங்களூர் அணி நிர்வாகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement