ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பல எதிர்பாராத திருப்பங்களுடன் வெற்றிகரமான 4-வது வாரத்தை தாண்டி மும்பை நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லெஜெண்ட் என பெயரெடுத்த நட்சத்திர வீரர் விராட் கோலி சொதப்பி வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 6402* ரன்களுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் மற்றும் அதிக சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மன் போன்ற வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ள அவர் இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே 41* ரன்கள் விளாசி நல்ல தொடக்கம் பெற்றார்.
ஆனால் அதன்பின் 12, 5, 48, 1, 12 என சரிய தொடங்கிய அவர் அதற்கடுத்த 2 போட்டிகளில் அடுத்தடுத்து சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 2008 முதல் 2021 வரை வெறும் 3 முறை மட்டுமே கோல்டன் டக் அவுட்டான அவர் இந்த வருடம் முதல் 8 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல்முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாகி பரிதாபமான பார்மில் தவிக்கிறார்.
100 ஆச்சு:
கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதமடித்த அவர் அதன்பின் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். கடைசியாக 2019இல் அடித்த அந்த சதத்திற்கு பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என மொத்தம் 101* போட்டிகளாக 2 வருடங்களாக விளையாடி வரும் அவர் சதத்தை தேடிய பயணத்தில் சதத்தை தொட்டுள்ளார் என்பது வேதனையாகும்.
சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் (100), ரிக்கி பாண்டிங் (71) ஆகியோருக்குப் பின் 3-வது தரமான பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்து தன்னை ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என ஏற்கனவே நிரூபித்துள்ள அவர் இப்போது சதம் அடிப்பார், அப்போது பார்முக்கு திரும்பி விடுவார் என கடந்த 2 வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமடைவது தொடர்கதையாகி வருகிறது. அதிலும் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாகியுள்ள அவர் தற்போது உச்சபட்ச பார்ம் அவுட்டில் உள்ளார்.
பார்முக்கு திரும்ப முடியாது:
கடந்த பல வருடங்களாக இந்தியாவிற்கும் ஐபிஎல் தொடரிலும் ரன் மெஷினாக செயல்பட்டு வந்த அவரின் உடம்பிலும் ஆட்டத்திலும் களைப்பு காணப்படுவதால் பார்முக்கு திரும்ப வேண்டுமெனில் 2 – 3 மாதங்கள் அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் அவருக்கு கட்டாய ஓய்வு தேவைப்படுகிறது என்று ரவி சாஸ்திரி, வாசிம் ஜாபர் போன்ற பல முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் அடுத்த சச்சினின் சாதனையை விட மேலானவர் என கருதப்பட்ட விராட் கோலி தற்போது படுமோசமான பார்மில் திண்டாடி வரும் இந்த நிலையில் கடந்த 2021இல் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப் கூறிய கருத்து ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது 2021இல் பார்மை மீட்டெடுக்க முடியாமல் விராட் கோலி தவிப்பது பற்றியும் சச்சினை விட மேலானவர் என்பதை பற்றியும் அவர் யூடியூப் பக்கத்தில் பேசியிருந்தார். அவர் கூறியது பின்வருமாறு. “விராட் கோலி ஒரு பின் கை வீரர் (பாட்டம் ஹேண்ட் ப்ளேயர்). தனது பிட்னஸ் காரணமாக உடல் ஒத்துழைப்பு கொடுப்பதால் மட்டுமே அவரால் இந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முடிகிறது. எப்போது அவரின் உடல் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறதோ அதன்பின் அவரால் அதிலிருந்து மீண்டு வர முடியும் என்று எனக்கு தோன்றவில்லை”
“நிறைய பேர் சச்சினை விட விராட் கோலி சிறந்தவர் என்று கூறுகின்றனர். அதை நான் மறுக்கிறேன். சொல்லப்போனால் சச்சினுக்கு அருகில் கூட அவரால் வர முடியாது. ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் எப்போதும் மே கை (அப்பர் ஹேண்ட்) பயன்படுத்தி விளையாடினார். அந்த டெக்னிக் பயிற்சியாளராக இருந்தாலும் சரி அல்லது வீரர்களாக இருந்தாலும் சரி, ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.
Asif ny sach kha th k ye comeback nh kr sky ga ku k bottom hand plyr h or Sachin Tendulkar upr hand plyr th osk ass pss v nh kohli 💔 #ViratKohli𓃵 pic.twitter.com/uFdhv8RMhj
— Shoaib MuGhal (@ShoaibM12824034) April 24, 2022
கவர் ட்ரைவ், புல், கட் என அனைத்துவித ஷாட்டுகளை அடிப்பதில் சச்சின் வல்லவர். அந்த வகையில் விராட் கோலியும் ஷாட்டுகளை அடிக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை அனைத்தையும் பாட்டம் ஹேண்ட் பயன்படுத்திதான் அவர் அடிக்கிறார்” என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : வழக்கம்போல வேலைய காமிச்சிடாங்க.. இதைவிட மோசமா யாராலும் தோக்க முடியாது – பெங்களூரு அணியின் தோல்விக்கு என்ன காரணம்?
அந்த சமயத்தில் அவரின் கருத்துக்களை யாரும் பெரிய அளவில் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் 2019லேயே அவர் கணித்தது போல் தற்போது விராட் கோலி பார்மை மீட்டெடுக்க முடியாமல் தவிப்பதால் அவரின் கருத்து உண்மைதான் போலிருக்கிறது என்று நிறைய ரசிகர்கள் தற்போது அவர் பேசிய வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.



