தோனி மட்டுமல்ல அவரமாதிரி இன்னொரு டேஞ்சரான பினிஷரும் ஐ.பி.எல் தொடர்ல இருந்தாரு – இர்பான் பதான் ஓபன்டாக்

pathan 1
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் மிகச் சிறந்தவராக விளங்கி வரும் தோனி இன்றளவும் மிக அபாயகரமான ஆட்டக்காரராக விளங்கி வருகிறார். தற்போது 40 வயதை தொட்டுவிட்ட அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தாலும் ஐபிஎல் தொடரில் இன்னமும் அவர் களத்தில் இருக்கும் வரை எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சற்று நடுக்கம் இருக்கிறது என்று கூறலாம். அந்த அளவிற்கு அவரது அதிரடியான ஆட்டமும், போட்டியை முடித்துக்கொடுக்கும் திறனும் குறையாமல் உள்ளது.

MS Dhoni 28

- Advertisement -

அதற்கு சரியான உதாரணமாக நடைபெற்று முடிந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியை கூறலாம். ஏனெனில் ஆரம்ப காலத்தில் தோனி எவ்வளவு அபாயகரமான ஆட்டக்காரர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் தற்போது 40 வயதை தொட்ட அவரிடம் இன்னமும் பவர் இருக்கிறதா என்று விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அவரது திறமையை நிரூபிக்கும் வகையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அவர் தனது விளையாட்டை காண்பித்தார்.

ஏனெனில் மும்பை அணிக்கு எதிரான அந்த முக்கியமான போட்டியில் இறுதிநேரத்தில் சிக்கலான சூழலை சென்னை அணி சந்தித்திருந்தாலும் இறுதிவரை தோனி கூலாகவே இருந்தார். அதிலும் குறிப்பாக கடைசி ஓவரின் 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற போது அனைவரும் மும்பை அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தோனி கடைசி 4 பந்துகளில் 16 ரன்களை குவித்து அணி வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இப்படி இன்றளவும் சிறப்பாக விளையாடி வரும் தோனிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த பினிஷர் தோனி தான் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை தோனியோடு சேர்த்து ஏ.பி.டிவில்லியர்ஸ்-சும் மிகச்சிறந்த பினிஷர்தான் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐ.பி.எல் வரலாற்றை பொறுத்தவரை தோனி, ஏ.பி.டி இருவரும் மிகச்சிறந்த பினிஷர்கள் தான் என்று கூறியுள்ளார். மேலும் குறிப்பாக தோனி ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த பினிஷர் தான். ஏனெனில் வருடா வருடம் இந்த பட்டியலில் யாராரோ வந்தாலும் இன்றுவரை அவர் நிலைத்து நிற்கிறார்.

இதையும் படிங்க : இந்த ஒருவிஷயத்தில் தோனியைப்போல கெட்டிக்காரர் வேறுயாருமில்லை – மைக்கல் ஹஸ்ஸி புகழாரம்

அதேபோன்று ஐபிஎல் வரலாற்றின் மிகச்சிறந்த பினிஷராக ஏ.பி.டி யும் இருந்துள்ளார். எத்தனையோ போட்டிகளை பெங்களூரு அணிக்காக வெற்றிகரமாக முடித்துக்கொடுத்துள்ளார். ஆனால் இவர்கள் இருவரில் ஒருவர் என்றால் நான் தோனியை தான் கூறுவேன். இருப்பினும் ஏபிடி ஆட்டத்தையும் மறந்துவிடக்கூடாது என்று இர்பான் பதான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement