அமிதாப் சௌத்ரி செய்த இந்த காரியம்.! இந்திய வீரர்களின் ஊதியம் நிலுவையில் உள்ளது.!

crick-BCCI
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் தலைமை செயலகம் என்று கருதப்படும் சர்வதேச இந்திய கிரிக்கெட் சங்கம் (பி சி சி ஐ ), சமீபத்தில் உள்ளூர் ஆட்ட வீரர்களுக்கும் ,நடுவர்களுக்கு திருத்தப்பட்ட ஊதிய உயர்வை அளித்திருந்தது. ஆனால், ஊதிய உயர்வு அளிக்கப்பட்டும் இன்னும் இந்திய அணி வீரர்களுக்கு சம்பள பாக்கி நிலுவையில் தான் உள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

BCCI

- Advertisement -

கிரிக்கெட் தர வரிசையில் நம்பர் 1 அணியாக இருந்து வருகிறது இந்திய அணி, சமீபத்தில் இந்திய அணியில் உள்ள வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியதோடு ஒரு சில வீரர்களின் சம்பளத்தை ஏ ரகத்தில் உயர்த்தியது பி சி சி ஐ. இந்நிலையில் வீரர்களுக்கு சம்பள தொகையை அளிக்க தாமதம் ஏற்பட்டுள்ளதற்கு பி சி சி ஐ யின் தற்காலிக செயலாளர் அமிதாப் சௌத்ரி முன் வந்து மன்னிப்பு கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்’ வீரர்களின் சம்பளம் தொட்ர்பான ஒப்பந்தம் என்னிடம் உள்ளது. ஆனால், இன்னும் அது கமிட்டி பொது குழுவால் கையெழுத்து இடபடவில்லை. ஒருவேளை நிர்வாகம் அதற்கு ஒப்புதல் அளித்தால் நாளையே நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விடுவேன். இல்லை என்றால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் ‘ என்று கூறியுள்ளார்.

BCCI

சில நாட்களுக்கு முன்னர் தான் இந்திய சர்வதேச அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் ரவிசாஸ்திரி, மற்றும் இந்திய ஏ அணியின் பயிற்சியாலராக இருந்து வந்த ட்ரவிட்டிரும் கிடப்பில் கிடந்த 3 மாத சம்பள பாக்கியை பி சி சி அளித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது. இதனால் பி சி சி யின் இந்த மெத்தன தனத்திற்கு ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Advertisement