வெ.இ ஒருநாள் தொடர் : கங்குலி, தோனி, கோலி யாராலும் செய்யமுடியாத மாஸ் சாதனை படைத்த ரோஹித்

Rohith
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 6 முதல் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்று வந்த இந்த ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2 – 0* என ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது.

INDvsWI

- Advertisement -

இதை அடுத்து இத்தொடரின் 3-வது மற்றும் கடைசி சம்பிரதாய போட்டி இன்று மதியம் துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.இதை அடுத்த பேட்டிங்கை துவக்கிய இந்தியாவிற்கு கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க அடுத்து வந்த விராட் கோலி டக் அவுட்டாகி இந்தியாவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

அடுத்த சில ஓவர்களில் ஷிகர் தவானும் அவுட்டாக 42/3 என மோசமான தொடக்கத்தைப் பற்றி இந்தியாவை அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் மீட்டெடுக்க போராடினார்கள். இந்தியாவை காப்பாற்ற போராடிய இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்து சிறப்பாக விளையாடிய போது ரிஷப் பண்ட் 56 ரன்களில் அவுட்டானார்

Prasidh-1

மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 80 ரன்களில் அவுட்டாக கடைசி நேரத்தில் தீபக் சஹர் 38 ரன்களும் வாசிங்டன் சுந்தர் 33 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 265 ரன்கள் எடுத்தது. வெஸ்ட்இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

வைட்வாஷ் வெற்றி:
இதை தொடர்ந்து 266 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட்இண்டீஸ் முதலிரண்டு போட்டிகளைப் போலவே இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மீண்டும் ஆரம்பத்திலேயே சொதப்ப ஆரம்பித்தது. குறிப்பாக அந்த அணியின் ப்ரண்டன் கிங் 14, ஷாய் ஹோப் 5, ப்ராவோ 19 என டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாக அடுத்து வந்த ப்ரூக்ஸ் டக் அவுட்டாகி பெரிய அதிர்ச்சியை அளித்தார். இதனால் 68/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அடுத்து வந்த வீரர்களும் சீரான இடைவெளிகளில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

prasidh 1

இறுதியில் 37.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் வெறும் 169 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஓடின் ஸ்மித் 18 பந்துகளில் 36 ரன்கள் விளாசினார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். இதன் வாயிலாக 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

மாஸ் கேப்டன் ரோஹித் சர்மா:
இந்த 3வது போட்டியில் 80 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்ட நாயகனாகவும் இந்த தொடர் முழுவதும் கலக்கிய இளம் வீரர் பிரசித் கிருஷ்ணா தொடர்நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்கள். முன்னதாக முழுநேர வெள்ளைப் பந்து கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின் காயத்திலிருந்து குணமடைந்தது முதல் முறையாக இந்த தொடரில் இந்தியாவின் கேப்டனாக ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் செய்தார்.

IND

இந்த தொடரின் 3 போட்டிகளிலும் அவரின் கேப்டன்ஷிப் அபாரமாக இருந்ததால் 3 – 0 என்ற கணக்கில் வெஸ்ட்இண்டீசை தோற்கடித்த இந்தியா வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்து கோப்பையை முத்தமிட்டுள்ளது. இதன் வாயிலாக “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரில் வைட்வாஷ் வெற்றியைப் பெற்ற முதல் இந்திய கேப்டன்” என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

ஆம் கடந்த 1983 முதல் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக கபில்தேவ், சௌரவ் கங்குலி, எம்எஸ் தோனி, விராட் கோலி என பல ஜாம்பவான்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் தலைமையில் இந்தியா ஒரு முறை கூட ஒயிட்வாஷ் வெற்றியை பெற்றதே கிடையாது. தற்போதுதான் முதல் முறையாக ரோகித் சர்மா தலைமையில் இந்த மகத்தான சரித்திர வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது.

rohith

இது மட்டுமல்லாமல் கடந்த 2007க்கு பின் இந்த தொடரையும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்ற 11 ஒருநாள் தொடர்களிலும் ஒருமுறை கூட தோற்காமல் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக தொடர்ந்து அதிக ஒருநாள் தொடர்களில் வென்ற அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனையையும் இந்தியா சமன் செய்துள்ளது.

Advertisement