பயிற்சி போட்டியின் போது தனது வித்தைகளை ரிஷப் பண்டிற்கு கற்றுக்கொடுத்த தோனி

Dhoni
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியாக 24-ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட இந்திய அணி திட்டமிட்டிருந்தது. அதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் நேற்று மோதியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்கள் குவிக்க 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களது சிறப்பான ஆட்டம் காரணமாக 17.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 153 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் மென்டர் தோனி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து கொண்டிருந்தபோது ரிஷப் பண்ட்டிற்கு பவுண்டரி லைனின் அருகே கீப்பிங் பிராக்டிஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் இஷான் கிஷன் இந்திய அணியுடன் இணைந்து கீப்பிங் செய்து கொண்டிருந்ததால் ரிஷப் பண்ட்டை பவுண்டரி லைனின் அருகே அழைத்து அவருக்கு கீப்பிங் குறித்த நுணுக்கங்களை கூறியது மட்டுமின்றி அங்கேயே ஸ்டம்ப் ஒன்றினை நட்டு அவருக்கு கீப்பிங் பிராக்டிஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் தோனி இதுகுறித்த வீடியோவும் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. அதுமட்டுமின்றி இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த தோனி கீப்பிங் பயிற்சி எடுக்க மாட்டார் என்றாலும் சிறப்பான முறையில் கீப்பிங் செய்து தற்போது வரை மிகச்சிறந்த கீப்பர் என்ற பெயர் எடுத்தவர். இந்நிலையில் அவரது அனுபவங்களை பவுண்டரி லைனில் அருகே இளம் விக்கெட் கீப்பர் ஆன ரிஷப் பண்ட்டிற்கு அவர் பகிர்ந்தது பெரிய அளவில் பாராட்டை பெற்றுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : காயம் காரணமாக உ.கோ அணியிலிருந்து வெளியேறிய முரட்டு ஆல்ரவுண்டர் – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அடி

அணியின் ஆலோசகராக இருக்கும் தோனி அவ்வப்போது பேட்ஸ்மேன்களுக்கு ஆலோசனை கொடுத்துக்கொண்டே இருக்க தற்போது பண்டிற்கு மைதானத்தில் வைத்து கீப்பிங் பயிற்சி வழங்கியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ரிஷப் பண்ட் தற்போது மிகச்சிறப்பான பேட்டிங் பார்மில் இருந்தாலும் கீப்பிங்கில் அவர் சற்று சொதப்பலாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தோனியின் பயிற்சி அவருக்கு நிச்சயம் பெரிய அளவில் உதவும் என்பது மட்டுமின்றி அவருக்கு நம்பிக்கையையும் அளித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement