எப்படி பட்ட ஒரு வீரரை இப்படியா நடத்துவீங்க ? டேவிட் வார்னரின் நிலையை பார்த்த – ரசிகர்கள் சோகம்

Warner
- Advertisement -

சன் ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் வார்னர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக சில போட்டிகளில் அந்த அணி மோசமான தோல்விகளை சந்தித்தது. அதனையடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து முதல்பாதியில் சில போட்டிகளில் அவர் வெளியிலும் அமர வைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டாம் பாகத்திலும் முதலில் சில வாய்ப்புகள் அவருக்கு கொடுக்கப்பட்ட போதும் அவர் சிறப்பாக விளையாடாததால் மீண்டும் அணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஒரு சில போட்டிகளை அவர் மைதானத்திற்கு வராமல் ஹோட்டலில் கண்டுகளித்த நிலையில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது போட்டியை மைதானத்தில் ரசிகர்களுடன் கேலரியில் அமர்ந்து பார்த்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

மேலும் டேவிட் வார்னர் வீரர்களின் இடத்தில் அமராமல் ரசிகர்கள் அமரும் கேலரியில் அமர்ந்து போட்டியை கண்டு களித்தது தற்போது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் 2016ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை சன்ரைசர்ஸ் அணிக்காக வெற்றி பெற்று கொடுத்த ஒரு கேப்டன் என்று கூட பாராமல் அவரை இதே போன்று அந்த அணி நிர்வாகம் நடத்துவது ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

உலக அளவில் முன்னணி வீரராக திகழும் டேவிட் வார்னர் இப்படி ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நிச்சயம் இனி வரும் போட்டிகளில் அவர் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட வில்லை என்றாலும் அடுத்த ஏலத்தில் அவர் புதிய அணிக்கு மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவால் ஏற்பட்டுள்ள சிக்கல். செலக்டர்ஸ் மற்றும் டீம் மேனேஜ்மென்ட் அதிருப்தி – விவரம் இதோ

அதுமட்டுமின்றி இந்த ஆண்டு அவரது பார்ம் சரியில்லை என்று நீக்கப்பட்டாலும் அடுத்த ஆண்டு நிச்சயம் அவர் பழையபடி மீண்டு வருவார் என்றும் தங்களது ஆதரவை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement