4 ஆவது : இந்திய அணியில் ஏற்படவுள்ள 3 மாற்றங்கள் – இதை செய்ஞ்சா வெற்றி உறுதி

indvseng
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இந்த தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Eng-1

- Advertisement -

இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை பெறும் என்ற காரணத்தினால் நாளைய போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே வேளையில் நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும் என்பதால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் மூன்று போட்டிகளிலுமே இந்திய அணியில் சரியாக விளையாடாத வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் துணை கேப்டன் ரகானே அதற்கு பதிலாக விகாரி, இசாந்த் சர்மாவிற்கு பதிலாக ஷர்துல் தாகூர் மற்றும் ஜடேஜா அவருக்கு பதிலாக அஸ்வின் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Ashwin

இதன் காரணமாக நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதுவரை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஓவல் மைதானத்தில் 13 முறை விளையாடி உள்ளன. அதில் இங்கிலாந்து அணி 5 முறையும் இந்திய அணி ஒரு முறை மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement