இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின்போது ரிஷப் பண்ட்டிற்கு எதிராக அம்பயர்கள் எடுத்த ஒரு முடிவு தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமின்றி பெரிதளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்றைய போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தொடர்ந்து கிரீசுக்கு வெளியே நின்று பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அதனை கவனித்த அம்பயர்கள் இனிமேல் நீங்கள் கிரீசுக்கு வெளியே நின்று பேட்டிங் செய்யக்கூடாது என்று எச்சரித்தனர்.
அதன்பிறகு ரிஷப் பண்ட் கிரீசுக்குள் நின்றவாறு பேட்டிங் செய்து கொண்டிருந்தார். பிறகு ஏன் நான் கிரீசுக்கு உள் நின்று விளையாட வேண்டும் என்று பண்ட் கேள்வி எழுப்பியதற்கு : நீங்கள் வெளியே நிற்பதால் மைதானத்தில் முக்கிய சில பகுதிகள் சேதம் அடைகின்றன. இதன் காரணமாகவே நீங்கள் உள்ளே நிற்க வேண்டும் என நடுவர்கள் கூறி இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த விடயம் தற்போது சர்ச்சையாக வெடிக்க இந்த விவகாரம் குறித்து தனது பதிலடியை கொடுத்துள்ள சுனில் கவாஸ்கர் காட்டமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒரு பேட்ஸ்மேனை எப்படி நடுவர் கட்டுப்படுத்த முடியும். ஒரு போட்டியில் எங்கு நின்று விளையாட வேண்டும் பேட்ஸ்மேனின் தனிப்பட்ட முடிவு. ஒரு பேட்மேனின் தனிப்பட்ட முடிவில் அம்பயர் நுழையக்கூடாது.

ரிஷப் பண்ட் எங்கே நிற்க வேண்டும் என்று அம்பயர் கூறியது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. கிரீசுக்கு வெளியே நின்றால் பிட்ச் சேதமடையும் என்று கூறுகிறீர்கள். ஒரு வேளை ஸ்பின்னர் போடும்போது பேட்ஸ்மேன் ஏறிவந்து ஆடுகிறார்கள் அப்போது பிட்ச் சேதமடையாதா ? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதே போன்று மற்றொரு இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் : நடுவரின் இந்த முடிவு தவறானது. இப்படி ஒரு விதிமுறை கிடையாது என்றும் தனது கருத்தினை வெளிப்படையாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



