பிட்ச் எல்லாம் நல்லா தான் இருந்துச்சி. ஆனா நாங்க தோத்ததுக்கு இதுதான் காரணம் – விராட் கோலி வேதனை

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி துவங்கி இன்று நான்காம் நாளன்று முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்களில் ஆட்டமிழக்க அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 432 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணியானது இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் 278 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

Kohli

- Advertisement -

இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்கள் எடுத்திருந்தது.

இப்படி பலமாக இருந்த இந்தியானது இன்று மேலும் 63 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் மீதமுள்ள 8 விக்கெட்டுகளை இழந்து பரிதாப தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி தோல்வி குறித்து பேசுகையில் கூறியதாவது : ஸ்கோர்போர்டு பிரஷர் எங்களை கீழே தள்ளியது. முதல் இன்னிங்சில் நாங்கள் குறைவான ரன்களை குவித்ததால் இங்கிலாந்து வீரர்கள் பெரிய ரன் குவிப்பை எட்டிவிட்டனர்.

pujara 1

இருப்பினும் இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் சில நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தோம். இந்த மைதானம் நல்ல பேட்டிங் பிட்ச் தான். இருப்பினும் இங்கிலாந்து வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி எங்களை தவறு செய்ய வைத்தனர். அவர்களது ஒழுக்கமான பந்துவீச்சு எங்களை தவறு செய்ய வைத்தது. இதன் காரணமாகவே இன்றைய நாளில் பேட்டிங்கில் மிகுந்த தடுமாற்றத்தை சந்தித்தோம். எங்களுடைய அணியின் பேட்டிங் டெப்த் இல்லை என்று அனைவரும் சொல்கின்றனர்.

ENG

ஆனால் இந்திய அணியில் நல்ல பேட்டிங் ஆர்டர் இருக்கிறது. இருப்பினும் பின்வரிசையில் உள்ள மிடில் ஆர்டரில் நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். நாங்கள் நல்ல அணியிடம் தோற்று விட்டோம், அவர்கள் வெற்றி பெற தகுதியானவர்கள் என்று விராட் கோலி தோல்வி குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement