50 போட்டி ஆயிடுச்சி. என்னடா இது விராட் கோலிக்கு வந்த சோதனை – இவருக்கு இப்படி ஒரு நிலைமையா ?

Anderson-3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாப நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி மீண்டும் ஒருமுறை விரைவாக தனது விக்கெட்டை விட்டுக்கொடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

Anderson

அதன்படி இந்த போட்டியில் விளையாடிய விராட் கோலி 17 பந்துகளை சந்தித்த நிலையில் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக சதமடிக்காமல் இருந்து வரும் விராட் கோலி இந்த இங்கிலாந்து தொடரில் சதம் அடித்து மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதலிரண்டு ஆட்டங்களிலும் விராட் கோலி பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

இந்நிலையில் இன்றைய போட்டியின் போது துவக்கத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்ததால் நிச்சயம் இந்த போட்டியில் விராட் கோலி தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய போட்டியிலும் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

anderson 1

இந்நிலையில் இந்த போட்டியில் ஆட்டமிழந்து வெளியேறியதன் மூலம் கோலி ஒரு மோசமான நிலையை சந்தித்திருக்கிறார். அதன்படி கோலி கடைசியாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் சேர்த்து அவர் 50 சர்வதேச போட்டிகளில் அவர் சதம் அடிக்காமல் விளையாடி வருகிறார்.

kohli century

கடந்த இரண்டு ஆண்டுகளில் 18 டெஸ்ட் போட்டிகள், 15 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டி20 போட்டிகள் என 50 போட்டிகளாக ஒரு சதம் கூட விராட் கோலி அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் தான் அறிமுகமான காலத்திலிருந்து தொடர்ச்சியாக சதம் விளாசி வரும் கோலிக்கு இப்படி ஒரு நிலைமையா என்று ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement