மூன்றாவது டெஸ்ட் : இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணியானது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று (ஆகஸ்ட் 25) நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

indvseng

- Advertisement -

ஏனெனில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெளியில் அமர்த்தப்பட்ட அஷ்வின் இன்றைய போட்டியிலாவது சேர்க்கப்படுவாரா ? என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் இன்றைய போட்டியிலும் அவர் 12வது வீரராகவே தொடர்வார் என்று தெரிகிறது. அதன்படி இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் துவக்க வீரர்களாக சிறப்பாக விளையாடி வரும் ரோகித் மற்றும் ராகுல் ஆகியோரே தொடர்வார்கள்.

அதுமட்டுமின்றி லார்ட்ஸ் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் ரகானே ஆகியோரது இடமும் தற்போது மூன்றாவது போட்டிக்கு உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக மிடில் ஆர்டரில் விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் விளையாடுவார்கள் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டும் ஆல்-ரவுண்டராக ஜடேஜாவும் இடம்பெறுவார்கள்.

IND 1

மற்றபடி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களாக கடந்த போட்டியில் விளையாடிய சிராஜ், பும்ரா, ஷமி மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. இதனால் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணி இந்த போட்டியில் விளையாடும் என்றும் அதற்கு முன்னர் மைதானத்தில் உள்ள தன்மையை ஆராய்ந்து அதற்கேற்றபடி ஒரு சில மாற்றம் இருந்தாலும் இருக்கலாம். மற்றபடி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் இருக்காது. இன்றைய மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) பண்ட், 7) ஜடேஜா, 8) பும்ரா, 9) சிராஜ், 10) முகமது ஷமி, 11) இஷாந்த் சர்மா

Advertisement