மீண்டும் சொதப்பிய சீனியர் வீரர். சூரியகுமாருக்கு டெஸ்ட்ல வாய்ப்பு குடுங்க – ரசிகர்கள் கோரிக்கை

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 65.4 ஓவர்களுக்கு 183 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகள், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Kohli

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 2ஆம் நாள் ஆட்டத்தில் ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப் அமைக்க முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி 97 ரன்கள் குவித்தது.

இப்படி சிறப்பான அடித்தளம் கிடைத்ததால் இந்திய அணி பெரிய ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து வந்த புஜாரா 4 ரன்களிலும் அவுட் ஆகியும், கோலி டக் அவுட் ஆகியும், ரகானே 5 ரன்களிலும் வெளியேறியதால் 112 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் தற்போது ராகுல் 57 ரன்களுடனும், பண்ட் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.

மழை காரணமாக முன்கூட்டியே நிறுத்தப்பட்ட இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை குவித்து இருந்தது. இன்னும் இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 58 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் மீண்டும் சொதப்பிய சீனியர் வீரரான புஜாரா மீது ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஏனெனில் ஏற்கனவே அவர் குறைந்து ஸ்ட்ரைக் ரேட் உடன் ஆடுகிறார் என்றும் பெரிய அளவில் ரன் குவிக்க தடுமாறுகிறார் என்றும் விமர்சனங்கள் உள்ளது.

இந்நிலையில் தற்போது நான்கு ரன்களில் மீண்டும் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பி உள்ளது. அது மட்டுமின்றி அவருக்கு பதிலாக நல்ல திறமையுள்ள சூர்யகுமார் யாதவை அந்த இடத்திற்கு பயன்படுத்தி பார்க்கலாம் என்றும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement