தோல்வி அடைந்தாலும் இந்த தொடர் மூலம் இளம் வீரர்கள் கற்றுக்கொண்ட பாடம் இதுதான் – டிராவிட் வெளிப்படை

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது நேற்றுடன் முடிவடைந்தது. இந்த சுற்றுப் பயணத்தில் ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஆனது டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இலங்கை அணியிடம் இழந்தது. டி20 தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் முன்னணி வீரர்கள் இன்றி இளம் வீரர்களுடன் விளையாடி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இந்திய அணியின் வீரர்களை ஆதரித்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

INDvsSL

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளரான டிராவிட் இந்த டி20 தொடரில் இளம் வீரர்கள் செயல்பாடு குறித்து தனது கருத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த தொடரில் விளையாடியது முழுவதும் இளம் வீரர்கள் என்பதனால் இந்த தொடரில் தோல்வி அடைந்தது குறித்து நான் எந்த வித ஏமாற்றம் அடையவில்லை.

இதுபோன்ற மைதானங்களில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை எதிர்த்து அவர்கள் விளையாடியது சிறந்த அனுபவம். இந்த தொடரின் மூலம் சில பல விடயங்களை அவர்கள் கற்றுக் கொண்டு இருப்பார்கள். இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் தான் இளம் வீரர்கள் சிறந்த வீரர்களாக மாறமுடியும்.

IND

மேலும் இதுபோன்று ஸ்லோ டிராக்கில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதையும் அவர்கள் இந்த சில போட்டிகளின் மூலம் கற்றுக்கொள்ளவேண்டும். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடுவது எப்போதுமே அவசியம். அனைத்து போட்டிகளிலுமே எல்லோராலும் ரன்களை குவித்து விடமுடியாது. இளம் வீரர்களுக்கு என்னதான் திறமை இருந்தாலும் அனுபவம் என்பது மிகவும் முக்கியம். அதனை இந்த தொடர் மூலம் அவர்கள் அறிந்திருப்பார்கள்.

varun

கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடிய அனைவரும் இளம் வீரர்கள் என்பதனால் அவர்கள் இனி வரும் தொடர்களில் சிறப்பாக ஆட ஆடுவதற்கு இந்த தொடரின் மூலம் நல்ல பாடம் கற்பார்கள் எதிர்வரும் நாட்களில் இவர்கள் சிறந்த வீரர்களாக உருவாவார்கள் என்று நம்பிக்கை தன்னிடம் உள்ளதாக டிராவிட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement